எழில் – டுவிட்டரில் ஒரு தானியங்கியாக

தொடக்கம்

சென்ற வாரம் எழில் மொழியை டுவிட்டர் வழி செயல்படுத்த ஒரு உத்தி ஒன்றை உருவாக்கலாம் என்று தீர்மானித்தேன். பல செயல்பாடுகள் facebook, skype, போன்றவை messenger bot என்ற தானியங்கிகள் வழி செயல்படுவது ஓர் இரண்டு ஆண்டுகளாக சமணியமாகின.  இதே போல கடந்த மாதம் கனடாவில் குறள் பாட் என்ற தானியங்கி facebook செயலி பற்றி  கேள்விப்பட்டேன்; நிரைய நாட்களாக இப்படி ஒரு எழில் இடைமுகம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன், இதற்க்கு இப்போது ஒரு காலம் வந்துவிட்டது!

வழி

ஏற்கனேவே குறள்களை புதுவள்ளூர் @puthuvalluvar என்ற முகவரியில் தானியங்கி வழி செய்திருந்தேன். இது தற்போது செயலுற்று கிடக்கிறது ஆனால் இதனை செயல்படுத்த python-twitter என்ற நிரல் தொகுப்பை பயன்படுத்தினேன்; இதனை கொண்டு @ezhillangbot என்ற புது கணக்கில் ஒரு தனியாகியை உருவாக்கினேன். இதன் மூல நிரல் இங்கு. twitter பக்கம் நீங்கள் ஒரு

பயன்பாடு

இதனை ஒரு cron-வேலையாக நிறுவிய பின்னர் அனைவரும் பயன்பாடு செய்ய இப்படி உங்கள் கணக்கில் இருந்து ஒரு எழில் நிரலை டுவீட் செய்யுங்கள்;

               @ezhillangbot அச்சிடு(“வணக்கம் உலகம்!”)

இதனை படித்துவிட்டு தானியங்கி உங்கள் பெயரை சூட்டி நிரலின் விடையை அளிக்கும்; உதாரணம்,

ezhillangbot-tweet-toezhillangbot-execution-1

இதனை நீங்களும் பரிசோதனை செய்து எனக்கு தகவல்கள் சொல்கிறீர்களா ? டுவிட்டரில் நேர்வழி சொல்லுங்கள், இல்லகாட்டி இங்கும் சொல்லுங்கள்!

நன்றி.

முத்து