User interaction algorithms

From a software and hardware perspective Drag-and-drop and pinch-zoom technologies along with rise of commercial low-cost capacitive touch sensors underlie the smart-phone market opportunity of the last two decades.

In 2005, I was learning to program GTK framework for drag-and-drop and being somewhat frustrated. But all the work that has gone in translating these graphics researcher algorithms into software and making research capacitive sensor hardware into mainstream products is mind-blowing.

மலேசியா பார்ட்டி

சமிபத்தில் காரைக்குடிக்குச் சென்றிருந்தேன் – அலுவலக, சுற்றுலா, தமிழ் ஆர்வலர் பயணங்கள் எல்லாம் இல்லை – வாழ்க்கையின் பாதையில் கழுத்தறுக்கும் நிறுவனங்களுக்கிடையில், குடும்பம் என்பது குடும்பம் மட்டுமே என்று செம்மட்டியால் அடித்தவாறு புரியவைக்கிறது இந்த வாழ்க்கை.

எனினும், சரி, ஊர் பக்கம் வந்தாச்சு – கோயில் குளம் பிடித்தவற்றில் சென்று பார்க்கலாம் என்ற ஆசை இருந்தாலும் ஊரிலுள்ள கம்பன் கழகம், தமிழ் தாய் மண்டபம் எல்லாம் கூட இன்நாள் வரை பார்க்கவில்லை என்ற ஒரு மென்சோகம். கல்லுக்கட்டி பக்கம் தமிழ் மருந்து, வெட்டிவேர் வாங்க, சில பிளாஸ்டிக் சாமான்கள் வாங்க சென்றப்போது அன்னை கொப்புடையம்மன் அழைத்த மாதிரி ஒரு நினைவு; உச்சிகாலத்திற்காக கோயில் மூடப்படும் வேளையில் சில நொடிகளில் நுழைந்து என்ன திறையிட்டிருந்தாலும் கிடைக்கிற அருளைப் பெறலாமென சென்றேன்.

அறநலத்துறை ஊழியர் என்னை விரட்டவில்லை – மனதளவில் வெளி நாட்டவன் போல, மடித்துவிட்ட முழுக்கை சட்டை, அரைக்கால் டிரவுசர், போட்டவாறு இந்த 40*C வெயிலில் யார் வருவார் என்று அவருக்கு அனுபவம் சொல்லித்தந்திருக்குமோ என்னவோ. அம்மன் சன்னதி திறையிட்டிருந்த்தது – உள்ளிருந்த ஐயரிடம் … மலேசியா பார்ட்டி வந்திருக்காறு என்று சொல்லி கும்குமமும், பூமாலையும் கிடைக்கச்செய்தார். “ஐனூறு ரூவா குடுங்க” – என்று உரிமையுடன் கேட்டார் – என்னடிம் இருந்த்தை பகிர்ந்தேன்.

கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, வாழ்க்கை, வேட்கை எல்லாம் சிறக்க வேண்டிக்கொண்டு, அம்மன், இச்சா, கிரிய, துவாரக சக்திகளை வணக்கி விடைபெற்ற ஒரு நிறைவான அமெரிக்காக்காரனானேன்…