மகளிர் தினம்

சமுகத்தின் முன்னேற்றம், நலன், வளர்ச்சி எல்லாம் நம் கைகளில். ஆண்களும் – பெண்களும். வளர்வோம் – வளரவிடுவோம்.

எனது நோக்கில் நான் கண்டது பெண்களை ஒரு சில கோண்ங்களில் மட்டும் நோக்குவது, அவர்களிடம் பழகுவது, உரையாடுவது, இணையத்தில் கருத்துப் பரிமாருவது என்ற எல்லா துரைகளிலும் நாம் இந்த வளர்ச்சியில் ஆண்-ஆதரவாளராக (male-allies) திகழலாம். பெண்களும் குரல் கொடுத்து இயங்கலாம் – அதற்கு சாதகமான psychological safe space ஆகவும் நாம் தளங்கள் இருக்கவேண்டும்.

தமிழ் உலகில் மாலதி மைத்ரி, குட்டி ரேவவி, மீனா கந்தசாமி, சல்மா என பல எழுத்துலக ஆளுமைகள் இவ்வித கருத்துக்களை பெண் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் பேச்சின் வழி நான் கண்டறிந்த ஒரு சிறந்த நூல், சிமிமண்டா ங்கோசி அடிசி-யின் “We should all be feminists” – நேரம் கிடைத்தால் இந்த ஆண்டு மகளிதனத்தன்று படியுங்கள்:

எந்திரக்கற்றல் – தளிர் (Thalir)

முருகன் வேல் ஏந்தியதாக DALL-E உருவாக்கியது
மதுரையில் வின்வெளி வீராங்கனைகள் இட்லி தோசை உண்ணுவதாக DALL-E செயற்கையறிவு செயலி உருவாக்கிய படம்.

எந்திர வழி கற்றலில் தமிழுக்காக ஏதாவது பண்ணவேண்டும் – ஆக்கப்பூர்வமாக அதுவும் என்றபடி ஒரு குழு சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் நானும் ஒருவனாக இருக்கையில் இந்த திட்டத்திற்கு சற்று பெயர் தேடல், முதல் கூட்டம் (kickoff meeting) போடவேண்டும்.

பெயர்கள் நக்கலாக மனதில் தோன்றுகிறது; எக்கா– எந்திரக்கற்றல் தொகுப்பு என்று பெயர் வெக்கலாமா? இல்லை மிளிர் (MILIR) என்று ML for Indian Languages in Repose ? இல்லை தளிர் அப்படின்னா – தமிழ் மொழிக்கு machine learning – Tamil for machine learning and reproducibility. இது ஒரு தற்காலிக பெயர் என்றே எண்ணுகிறேன்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க உங்களது பங்கேற்பிற்கு வசதியான தேதிகளை கீழ் உள்ள கூகிள் படிமத்தில் அளிக்கவும் https://forms.gle/GfPiTRffatRagFKB8

நன்றி

சுனாமி அலையில் பல தோனி …

மழைபெய்தாலும் வாய்க்கால் வெட்டி, நீர் நிலைகளை பராமரித்து, ஊரனிகள் தேக்கி வயலுக்கும் தோட்டத்திற்கும் வரும் நீரை பாத்திக்குள் வரவழைப்பது ஒரு வேளான் நிபுணரின் கைவசம், வசிக்கும் ஊரின் தோலை நோக்குப்பார்வை. 

இதில் லாப நோக்குடன் செயல்படுவது இன்னும் சாமர்த்தியம் – அமெரிக்காவில் இருந்து க்ஷ்ஃகொண்டு தொழில் முனைவோர் எல்லாம் பிணம்தின்னி என்றால் அது முதலாளித்துவத்தின் புரிதல் இல்லாததை மட்டுமே காட்டும். 

எது எப்படியோ நமது கதையில் ஒரு செயற்கை அறிவு என்ற ஒரு பெரு மழை பெய்து கொண்டிருக்கிறது; அதில் நம்மவர் பல துறைகளில் வல்லுநர்களாகவும், பொது நோக்கின் அடிப்படையிலும் பல இந்திரவழி செயலிகள், மாதிரிகள் (மாடல்கள்) போன்றவற்றை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக hugging face model zoo – முன்பயிற்சி செய்யப்பட்ட மாடல் முன்மாதிரிகள் உள்ளன; அவற்றில் பல தமிழ் முன்மாதிரிகள் காணலாம் தேடல் சுட்டி ; இதனை தாண்டி சுந்தர் மாமாவின் ஆட்களும் (Tensorflow Hub) மார்க் அண்ணனின் ஆட்க்களும் (PyTorch Hub) வெளியிட்ட மொழிமாதிரிகளில் பலவகை தேரும் – இவற்றையும் கையக்ப்படுத்திக்கொண்டால் சிறப்பு.

இங்கு நமக்கு என்ன வேண்டுமெனில் ஒரு பொது அளவில் எளிதாக (HW Accelerator, GPU-மாதிரி சக்தியுள்ள சில்லுகள் இருந்தாலும் மட்டும்) இந்த மாதிரிகளை கணிக்கச்செய்து நமது தமிழ் உலகில் உள்ள செயலிக்களில் சேற்றுக்கொள்ள வயப்படும்.

குறைந்த பட்சம் மொழிமாதிரிகள் (LLM – large language models, BERT போன்றவை), செயற்கை பேச்சுணரி (ASR – automatic speech recognition), செயற்கை அறிவு வழி (நரவலை வழி) எழுத்திலிருந்து பேச்சு தயாரிக்கும் பொறி (TTS – text to speech engine) ஆகிய சேவைகள் பொதுவாக 

இதனை எப்படி செயற்படுத்துவது? ஆர்வம் உள்ளவர்கள் – ஒரு ஓப்பன்-தமிழ் அதனைவிட சிறப்பான பாணியில், “Tools for constructing AI/ML solutions for Tamil,” https://github.com/Ezhil-Language-Foundation/open-tamil/blob/main/conference-publications/INFITT-Thanjavur-2022/Tools%20for%20constructing%20AI_ML%20solutions%20in%20Tamil.pdf என்ற எங்களது கட்டுரையின் பரிந்துரையில் செயற்பட விரும்புபவர்கள் : ezhillang@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பவும்; கீழும் கருத்துக்களிடலாம்.

நன்றி.

open-tamil முற்றுப் புள்ளி 🙏🏾✌🏾🙇🏾‍♂️

எழில்-open-tamil contributors meetup
எழில்-open-tamil contributors meetup (2018) 

Since the release of our paper, Tools for constructing AI/ML Solutions in Tamil, in 2022 Tamil Internet Conference in Thanjavur, India, we have progressed to a realization that next frontier of Tamil computing has largely moved along with the tidal wave of AI/ML developments in the industry.

To this extent we will only accept bug reports and migration updates (to new platforms, python versions) for the Open-Tamil repository; today this repository will go into public archive. The software and bug fixes will continue to be available through the Python Packaging repository and Github.

This is our announcement of end-of-life for active development the product and beginning of long-term maintenance mode.

I sincerely thank each and every one of our contributors, bug reporters, users and sponsors. Thank you for your support during this journey.

Muthu Annamalai

March, 1, 2023.