Beginning AI Applications in Tamil – Keras Tutorial

Starting from my first AI application, tamil/english word classification to transitioning into a full-time AI compiler/performance engineer today I have made a career transformation of sorts; I am sharing some information from my learnings here at INFITT-2021 workshop on Keras and beginning AI apps in Tamil.

#infitt2021 தமிழ் கணிமை மாநாட்டிற்கு பயிற்சி பட்டறை அளிக்கிறேன்

  • Download Presentation below:

Key points:

  • தமிழ் இணைய மாநாடு தொடர்பான பட்டறைக்கு உருவாக்கிய iPython புத்தகங்களை பொதுவளியில் இங்கு வைக்கிறேன்; ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தியும், பின்னூட்டங்கள் தரலாம். Notebooks and exercises can be found here https://github.com/Ezhil-Language-Foundation/open-tamil/tree/main/examples/keras-payil-putthagangal
  • AI can be biased based on training algorithms, or data, or both:

“Coded Bias” – சமுகத்தில் உள்ள ஒடுக்குமுறைகளை செயற்கையறிவில் வரையறுப்பது சரியா? #aiethics #ai-side-effects;

குப்பம்மா – உளிவீரன் அப்படின்னு பெயர்வெச்சா கடன் அட்டை கிடைக்காமல் போகவும் ராகுல், ப்ரியா என்று பெயர் வைத்தால் கிடைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் “Coded Bias” – எனில் செயற்கைஅறிவு உங்களுக்கு இது கிடைக்குமா என்ற தீர்வை கணிக்கும் நிலையில் உள்ளோம்! யாரிடம்திறவுகோல் உள்ளது?

நன்றி

-முத்து

செயற்கையறிவு – அறம்

Montreal-Declaration-for-AI

எதர்க்காக செயற்கையறிவு எந்திரங்கள் ? நாம் செய்யும் தற்சமையம் அபாயகரமான தொழில்களிலும், நிபுனர்கள் குறைவாக உள்ள தொழிகளிலும் அதன்கண் விலைவாசிகளை குறைக்கும் வண்ணம் பலருக்கும் அத்தகைய சேவைகளை அளிப்பதிலும், தினசரி வாழ்வில் உள்ள சிறு சிறு விடயங்களை மேம்படுத்தவும் இவைகள் உதவுவது நாம் குறிக்கோள்களானாலும், இவை மற்றும்தானா செயற்கையறிவின் இலக்குகள்/பயன்கள்?

இல்லை. தீய பயன்களுக்கும் செயற்கையறிவு சிலரால் பயன்படுத்தலாம்உதாரணம்:

  1. Black Mirror என்ற தொலைகாட்சித்தொடரில் “Metal Head” என்ற கதையில் இரத்த வெறிபிடித்த செயற்கை ஓனாய்கள் பற்றியும்,
  2. Silicon Valley HBO தொடரில் “Eklow” என்ற கதையில் “Fiona” என்ற எந்திர பெண் பாலியல் முறைகேடிக்கு உட்படுத்தப்படுவதும்,
  3. தமிழில் எந்திரன்-1 இல் காதல் மோகம் கொண்ட (சிவப்பு சில்லு புரோகிராமிங் கொண்ட) “சிட்டி

பற்றியும் படித்தால் நாளைய ரோபோக்கள் எந்தவித வேலைகளில் ஈடுபடலாம் என்றும் அவற்றில் சில மனித அறம் மீரியவை என்றும் புலப்படுகின்றது.

ரோபோக்களின் திறன்களை செயற்கையறிவின் அறம் கொண்டு நிர்ணயிக்கும் தருணத்தில் இன்று நாம்இருக்கின்றோம். இந்த நிலை வெகு ஆண்டுகள் நீடிக்கும் என்பது சந்தேகத்திற்குறியதாக இருக்கின்றது. முதன் முதலின் இவற்றினை பற்றி பிறபலமாக அலசல் செய்தும் ரோபோக்களில் மீர கூடாத/முடியாத மூன்று கோட்பாடுகள் அளித்தவர் அசிமோவ்.

மேலும், இந்த சூழலில் கனடிய மொண்ரியால் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கின் வழிவந்த ஒரு செயற்கையறிவு நடுவன் மற்றும் மூல கட்டமைப்பு கோட்பாடு உலகத்தரம் வாயந்ததாகவும், பொதுவான குடியரசு, ஜனநாயக, சமத்துவ, மனித உரிமை, கோட்பாடுகளின் மீதும் தழுவிய அறக்கோட்பாடுகளென காண்கின்றேன். இதன் முழு உரை இங்கே: https://www.montrealdeclaration-responsibleai.com/the-declaration – இந்த ஆவணத்தை சிறந்த வழக்கறிஞர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் சேர்ந்து தமிழிலும் ஒரு நாள் மொழிபெயர்ப்பார்கள் என்று எண்ணலாம்.

மேலும் ஐக்கிய அமெரிக்க அரசும் இதனைப்போல் ஒரு பொது நல செயற்கையறிவின் பயன்பாட்டினை அமெரிக்க நாட்டின் நலத்திற்காகவும், உலக மக்களின் நலன், முன்னேற்றத்திற்காகவும் இங்கு அளித்திருக்கின்றது. https://www.bloomberg.com/opinion/articles/2020-01-07/ai-that-reflects-american-values

எனது பொறியாளர் நம்பிக்கை என்னமோ இயந்திரங்களை நாம் பிரம்மனைப்போல் படைத்தாலும் அவற்றின் மரபணுவில் நமது தலை சிறந்த மனிதவியல் கோட்பாடுகளை மட்டுமே சேர்க்கவேண்டும்.

-முத்து.