அமெரிக்கர் தமிழ் சூழல்

இங்கு அமெரிக்காவில் 1471-இல் இருந்து உலகம் தோன்றியதாக ஒரு எழுதா மாயை ஓடிக்கொண்டிருக்கிறது. என்னத்தன் தமிழுக்கு புளித்தடவினாலும், ஆர்வர்டு இருக்கை, பெர்க்கிலி இருக்கை என்றெல்லாம் இருந்தாலும் தினசரி வாழ்வில் தமிழ் எவ்வளவு அமெரிக்கர் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகையால் தமிழில் செயல்படுபவர்கள், ஏதோ ஆதம் திருப்திக்கும், nostalgia, தாய்-சேய், பிறந்தமண், அரசியல் உணர்வு/உடன்பாடு/எதிர்ப்பு, சீண்டல், ஆன்மீகம், இணையவழி முகம்காணா சிலேடைப்பேச்சு என்றேல்லாம் இருந்தாலும் முற்போக்கு சிந்தனைக்கு தமிழில் ஈடுபடுவதாக பெரும்பான்மையான அமெரிக்க இந்தியர்கள் தமிழ் ஆர்வலர்களை காண்பதில்லை.

தமிழில் செயல்படுவது ஏதோ ஒரு atavism, பின்தங்கிய முயற்சிகளிலும் ஈடுபடுவதாகவும், புதிய சிந்தனைகளில் பங்கேற்காதவராகவும், (உதாரணம்: பால் ஈர்ப்பு அரசியல் சட்டங்கள் சீர்மை, [LGBTQ]) என்பதை எல்லாம் நிராகரிக்கும் வகையில் ஈடுபடுவதாக ஒரு கருத்தி ஒரு subliminal அளவில் ஓடிக்கொண்டிருப்பதை எவரும் உணரலாம்.

அமெரிக்காவில் தமிழ் அருமையான சடங்கு மொழியாக திழைக்கிறது – கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் – கருநாடக இசைக்கச்சேரிகள்; எதுவும் ஒரு கருத்தளவில் ஒரு படைப்பிலக்கியமாக, தமிழ் சூழலில் ஒரு புதிய சிந்தனைகளை (அமெரிகானாவில் இருந்து உள்வாங்கி) உருவாக்கும் என்ற எண்ணம் அதிகளவில் இல்லை; அமெரிக்க தமிழர்கள், அமெரிக்கா புலம்பெயர் இந்தியர்களை போல் பெரும்பான்மையில் தமிழ் (தாய்மொழி) மற்றும் ஆங்கிலம் கற்றதனால் அலுவலக வேலைகள், வீடு சாராத எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தில் செயல்படுவதால் தமிழ் அவர்களது வாழ்வில் என்ன தாக்கத்தையும் உருவாக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

எனினும் தமிழ் சூழலை உலகெங்கிலும் கவனம் கொள்பவர்கள் அமெரிக்கர்களால் தமிழ் அதிகம் வளராததை காணவும் முடிகிறது; எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஜோதிடம் சொல்ல என்க்கு ஆசையில்லை – ஆனால் americana என்பதை யாரும் படைப்பிலக்கியமாக ஒரு ஊக்க சக்தியாக ஒரு ஆணையா விளக்காக கொண்டு எந்த ஒரு முத்தமிழும் உருவாக்கியதாக தென்படவில்லை – இது மாரலாம் – இல்லாமலும் ஆகலாம்.