About

எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.

பெரும்பாலான கணினி நிரல் மொழிகளை எழுத விரும்புவோர், ஆங்கிலம் அறிந்திருக்கவேண்டும். காரணம் அம்மொழிகளுக்குரிய குறிச்சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. இதனால், ஆங்கிலம் அறியாதோர் அல்லது ஓரளவுமட்டும் அறிந்தோர் நிரலாக்கத்துறையில் சிறந்த நிபுணர்களாகமுடியாதபடி சிரமப்படுகிறார்கள்.

இந்நிலையை மாற்றுவதற்காக, ஆங்கிலம் அறியாதவர்களும் தங்கள் தாய்மொழியில் எளிதாக நிரல்களை எழுதும் வசதியைக் கொண்டுவருவதற்காகப் பலர் முயன்று வருகிறார்கள்.

இவ்வகையில் பிரெஞ்சுஅரபிஉருசியம்யப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் கணினி நிரலாக்க மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், எழில் தமிழ் மொழிக்குரிய நிரலாக்க மொழியாக உருவாகியுள்ளது.

குறிக்கோள்கள்[தொகு]

  • கல்வி: பள்ளி, கல்லூரிகளில் தமிழில் கணினியியல் கற்கும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே கற்க உதவியாக இருத்தல்
  • இயல்பு: எழில் நிரலாக்க மொழியின் கட்டமைப்பு தமிழ் இலக்கணத்தை ஒத்திருத்தல்

Ezhil, in Tamil language script (எழில்), is compact, open sourceinterpretedprogramming language, originally designed to enable native-Tamil speaking students, K-12 age-group to learn computer programming, and enable learning numeracy and computing, outside of linguistic expertise in predominatly English language based computer systems.

In the Ezhil programming language, Tamil keywords and language-grammar are chosen to easily enable the native Tamil speaker write programs in the Ezhil system. Ezhil allows easy representation of computer program closer to the Tamil language logical constructs equivalent to the conditional, branch and loop statements in modern English based programming languages.

Ezhil is the first freely available Tamil programming language, and one among the many known non-English programming languages. The language was officially announced in July 2009, while it has been developed since late 2007.

Read more

4 thoughts on “About

  1. அய்யா வனக்கம், என் பெயர் தாமரைசெல்வன், தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டம் செய்யுங்கள். எழில் தொடர்புடைய சந்தேகம் இருப்பின் வினாவுவதற்கு பயனாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.