சில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு

இரண்டு பைத்தான் சொற்பிழை திருத்திகளை சமிபத்தில் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் “பொட்டலம்” போட்டேன். அதாவது மளிகைக்கடைகளில் அரிசி பருப்பு வகைகள் சாக்குகளில் இருந்தாலும் மொத்தவிலை கடைகளில்லாமல் தனியார் செல்லும் நகர கடைகளில் இவை பொட்டலங்களாக “பாக்கேட்” செய்து, நமது நேர நெருக்கடிக்காக, விற்கப்படும். அதே போல பல நல்ல நிரல்கள் பொதுவிலும், கிட் ஹபிலும் இருந்தாலும், இவற்றை பொதுவில் நிரலர்கள் பயன்படுத்த நாம் இதனை பொட்டலம் செய்தும், அரிசியில் கற்களை பொறக்கியெடுத்தும் சீர்செய்து மளிகைக்கடைக்காரர் செய்வார் இல்லையா, பரிசோதித்தும் வெளியிட்டுள்ளேன்.

1. தமிழிணையவாணி

Python package released for Tamilinaya-Spellchecker by @tshrinivasan and team’s work (based on @Neechalkaran creation) http://pypi.org/project/tamilinayavaani/0.13/ Windows, Mac and Linux users can get the package by command:

$ pip install tamilinayavaani==0.13

Demo co-lab: here

2. தமிழ்சொற்பிழைதிருத்தி

Packaged tamilspellchecker https://github.com/malaikannan/TamilSpellChecker from @malai_san +team for Python https://pypi.org/project/tamilspellchecker/0.10/ – APACHE 2.0. Get your copy:

$ pip install tamilspellchecker>=0.10

Demo co-lab: here

ஓப்பன் தமிழ் வரிசைஎண்0.98 வெளியீடு

open-tamil v0.9 release.
ஓப்பன் தமிழ் வரிசை எண்: 0.98

வணக்கம் நண்பர்களே!

சென்ற வாரம் நவம்பர் மாதம் 13ஆம் நாள் அன்று open-tamil வரிசை எண் 0.98 வெளியீடு ஆனது; இந்த நிரல் தொகுப்பை பைத்தான் மொழியில் பெற,

$ pip install –upgrade open-tamil >=0.98

என்ற கட்டளைகள கொடுக்கலாம்.

இதில் புதிதாக சிறு வழு நீக்கங்கள் உள்ளன,

  1. தமிழ் மாத்திரை கணக்கிடும் சேவை திருத்தம் செய்யப்பட்டது; (tamil.utf8.total_maaththirai)
  2. tamil.regexp மோட்யூல் சீர்செய்து வழு நீக்கம் செய்யப்பட்டது; (வழு 228)

அன்புடன்,

(ஓப்பன் தமிழ் குழுவிற்காக) முத்து

கலிபோர்னியா

உயிர் எழுத்துக்கள்

இணைமதி எழுத்துருவில்; அச்சிட்டு விளையாடலாம். மனைவி, சாலா, கோரிக்கைக்கு ஒரு கலை திட்டம்/விளையாட்டு உருவாக்குவதற்கு இதனை செய்தோம்; வானவில் போன்ற நிரங்களில் (ROYGBIV) என்ற வரிசையில் நிரங்கள் உள்ளன.

வண்ணங்களும் எழுத்துக்களும் கண்டால் இதைப்போன்ற திட்டங்களிலும் செயலிகளையும் உருவாக்கவேண்டும் என்றும் ஒருவித ஏக்கம் தோன்றுகிறது. காண்பதெல்லாம் கண்களை குளிரவைக்கும் வட்டெழுத்துக்கள்.