வெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity

நிங்க. ஆமா. நீங்களேதான். தமிழ் மொழி, கலை, பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, இயல்-இசை-நாடகம், வெற்றி-தோல்விகள், சமூக சிக்கல்கள், வறலாறு, அதன்வழி வந்த கோளருகள் … எல்லாத்தையும் மற்ற மொழியினருக்கு, மற்ற நாட்டவர்களுக்கு சொல்ல வெளியுறவுத்துரை அமைச்சர் நீங்கதான். சமயத்தில் அடுத்த தலைமுரையினருக்கும் சொல்ல வேண்டிய பொருப்பும் இருக்கிரது.

Spiderman : சிலந்திகளின் பலம் கொண்டபோதிலும், அவன் அதிக பொருப்பின் சுமையால் பாதிக்கப்படுகிரான். படம் உரிமம்: விக்கிப்பீடியா.

சென்ற வாரம் எனது அலுவலகத்தில் எனது Microsoft Office செயலி Word வழி எதைப்பற்றியோ WebEx வழி தொலைபேசி-நேரலைபகிர்தல் வழியில் மற்றோரு மாகானத்தில் உள்ள ஊழியரிடத்தில் வேலை தொழில்னுட்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். [ஏற்கண்வே, நான் ஒரு ஆண்டுக்கு முன்பு (இதை பார்க்கவும்) இதனைப்போல் 40-மணிக்கும் மேலாக செயல்படும் வேலைமடிக்கணினியில் தமிழ் இடைமுகங்களை (localization) செயல்படுமாரு செய்தேன்.]

எனது திரையில் தமிழ் வட்டெழுத்துக்களைக்க கண்ட இவர் உடனே: இது என்ன முத்து, “Is it sanskrit?” அப்படின்னு கேட்டார். இல்லை இப்படி ‘தமிழ்’ என்றும், இந்தமாதிரி என்றும் சொன்னேன்.

‘அப்படியா! இதை சிலோனில் அல்லவா பேசுவார்கள்?’ என்றும் வினவினார். இல்லை சாமி, சிங்கை, சிலோன் மற்றும் முதன்மையாக தென்னிந்தியாவிலும் 3500 இந்திய மொழிகளில் முதன்மையான் 20-25 மொழிகளில் தமிழும் ஒன்று என்று சொன்னேன். அடுத்து நேபாள் நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவரின் பணித்திட்டம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இவர் “So is Nepalese same as Tamil?,” அப்படின்னு கேட்டார். நமக்குத்தான் லெக்சரடிக்க பிடிக்குமே – இன்னார் இன்னபடி என்றும் திராவிட மொழி, ஆரிய/வட மொழி என்றும், தேவனாகிரி மொழிகள் என்றும் உள்ளதைப்பற்றி சொன்னேன் – அவருக்கு ஒரே வியப்பு.

என்னவோ – இங்கு நான் வாழும்ஊரில் இந்தியர்களிடத்தில் ஆங்கில மொழிப்பற்று மட்டுமே உள்ளது. சிலிக்கன் சமவெளியில் [Silicon Valley] இந்தியர்கள் பத்தில் ஒருவரிம் கூட மற்றொரு மொழி – தமிழ்/இந்தி/தெலுங்கு/மலையாளம் விசைப்பலகைகளை பயன்படுத்துவதில்லை. செருமன், பிரெஞ்சு இருக்கலாமோ என்னவே கேட்டுப்பார்க்கிரேன்.

இந்திய மொழிகளை வேற்றுமைகளும்-வளமைகளும் [Linguistic Diveristy] ஒரு விளிம்பு நிலையில் தள்ளப்படுமா என்றும் ஒரு சிரிய அச்சம் என்னிடம் இருக்கிறது. இந்தியாவில் பிறந்து வளர்ந்ததினால் மட்டுமே பல மொழிகளின் தாக்கத்தில் வளந்ததில் பெருமை கொள்ளும் சமயம் [சட்டென்று யொசித்தால் – திராவிடம் என்பது கூட ஒரு வடமொழி சொல் என்றும் படும்] கணினியின் யுகத்தில் நமது மொழிகளின் அனுகுதல், வாசிப்பு, ஆக்கம், மற்றும் வளர்ச்சி என்பதை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கருதுகிறேன்.

400-ஆண்டு பிரிட்டீஷ் காலனித்துவத்தினால் கூட அழிவடையும் அளவு மாற்றம் அடையாத மொழி வேற்றுமைகளும்-வளமைகளும் கணினிக்குள் மொழியை உள்ளீடும் செய்யமுடியாமல் தவிக்கும் பலராலும், கணினியில் ஆங்கிலத்தின் சுலபமான செயல்பாட்டாலும் மொழி வளமை காலனித்துவத்தை விட அதிகமாக சிதைவடைகிறது என்பதை நான் காண்கிறேன்.

மொழியில் சிந்தனைகள், கேள்வி-பதில்கள், கூச்சல் குழப்பங்கள் இல்லாவிட்டால் அது இறக்கும் – பிரபல அறிஞரும் சம்ஸ்கிருத மேதையான ஸ்டிபேன் போல்லோக் எழுதிய சர்ச்சைக்குள்ளாகிய ‘Death of Sanskrit’ என்பதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்றால் இதுதான் – மொழியில் புழக்கம் வேண்டும். அதுஇல்லாவிட்டால், நமது இந்தியமொழிகளும் அருங்காட்சியகத்தில் தான் சென்று காண்போமா என்ன ? இல்லை, நமது காலத்தில் இப்படியெல்லாம் நடக்காது. இல்லையா ? இல்லைதானே…

ஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு

open-tamil v0.9 release.
ஓப்பன் தமிழ் வரிசை எண்: 0.9

வணக்கம் நண்பர்களே!

இன்று, இயல் மொழி ஆய்வு நிரல்தொகுப்பான ஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 என்பதில் இன்று வெளியிடப்பட்டது. இயல் மொழி ஆய்வுகள்செய்ய உதவும் இந்த நிரல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பைத்தான் மொழியில் நிங்களோ அல்லது உங்கள் நிரலரோ பயன்படுத்தலாம்.

$ pip install –upgrade open-tamil

 என்று கட்டளைஇடல் தேவை; இது உங்கள் கணினியில் நன்கு பரிசோதித்து வெளியிடப்பட்ட நிரல்தொகுப்பை நிறுவிவிடும்.

இந்த அத்யாயத்தில் உள்ள புதியது: தமிழ் வேர்சொல் பகுப்பாய்வு செய்ய உதவும் தொகுப்பு ‘tamilstemmer‘.

ஓப்பன் தமிழ் குழுவிற்கும், நிரல் தொகுப்பினை பயன்படுத்தி பரிந்துரை செய்தவர்களுக்கும் நன்றி!

-முத்து

கலிபோர்னியா