நீங்களும் ஆக்கலாம் – சரியான ஜோடி!

சரியான ஜோடி!
உயிரெழுத்துக்கள் ஜோடி சேர்க்கும் விளையாட்டு.

1 ஏன், என்ன, எப்படி ?

எழுத்து விளையாட்டு – ஜோடி சேர்த்தல் – இரண்டு காலங்களில் சீட்டில் எழுதிய பெயர் மறைந்தபடி (மல்லாக்க) அடுக்கிய சீட்டுகளை ஜோடி சேர்த்தல் என்பது “Memory Match” என்று எளிதாக பலரும் (வயதில் மூத்தவரில் இருந்து குழந்தைகள் வரை)  விளையாட உதவும். மேலாக இந்த விளையாட்டில் எவ்வித படங்களையும் சராசரியாக பயன்படுத்தினாலும், நாம் இங்கு தமிழ் உயிரெழுத்துக்களை புகுத்துப்பார்க்கலாம் என்று தோன்றியது. தோடர்ந்து படியுங்கள் – எப்படி இந்த விளை

2 தேவையான பொருட்கள்

  1. அச்சிட ஒரு பிரிண்டர்🖨️
  2. 📃A4 அல்லது US Letter அளவான தாள்
  3. ✂️கத்திரி (நீங்கள் சிறுவரானால் ஒரு பெறியவரிடம் உதவி கேளுங்கள்)
  4. கோந்து | செல்லோடேப்பு | இ….
  5. அட்டை

3 செய்முறை

1. நீங்கள் A4 தாளில் இந்த விளையாட்டை உருவாக்கவேண்டுமெனில் இதனை பயன்படுத்தலாம் (கிளிக் செய்யுங்கள்) கீழ் உள்ள படத்தை அச்சிடவும்:

A4 அளவிலான உயிரெழுத்து தாள்
A4 அளவு

நீங்கள் US Letter அளவில் செய்தால், கீழ் உள்ள படத்தை அச்சிடவும்.

US Letter அளவு உயிரெழுத்துக்கள் விளையாட்டு
இந்த US Letter அளவு உள்ள படத்தை அச்சிடவும்.

இந்த இரண்டு படங்களும் Python, PIL, Open-Tamil, அச்சு தமிழ் OCR தரவு  மற்றும் இணைமதி எழுத்துருவில் வழி உருவாக்கப்பட்டது.

2. படி ஒன்றில் உள்ள படத்தை A4 அல்லது US Letter அளவில் உள்ள தாளில் அச்சிட்ட பிறகு அதனை அட்டையில் ஒட்டவும்.

பிக்1
அட்டையில் அச்சிட்ட தாளை ஒட்டியபின். (நான் முதலில் செய்த பொழுது வேண்டாத வேலையாக அட்டையை 24 துண்டாகவும், மறுபடியும் தாளை 24 துண்டாகவும் வீன் வேலை பார்த்தேன் – நீங்கள் அப்படி செய்ய வேண்டாம்!) 😅

3. அட்டையில் ஒட்டியபின் கோடுகள் ஓடியபடி கத்திரியுங்கள். அட்டையின் தன்மையை பொருத்து சற்று பலமாக செயல்படுத்தலாம்; கவனாமக செயல்படுங்கள் ✂️. சிறுவரி, கொழந்தங்க கிட்ட இதனை கொடுக்கவேண்டாம்.

4. அடுத்து நீங்கள் விளையாடலாம்! விதிகள் இப்படி

4. விதிகள்

  1. ஒருவராகவும் அல்லது இருவராகவும் விளையாடலாம் – முறை மாற்றி விளையாட்டு;
  2. தமது முறையின் போது ஒருத்தர் இரண்டு சீட்டுகளை மல்லாக்க இருந்து திருப்பி எடுக்கலாம்; இந்த சீட்டுகளில் ஒரே படம் – அதாவது எழுத்து இருந்தால் – அதனை அவரே தன்னகப்படுத்தி மறுமுறை விளையாடலாம் -சீட்டு ஜோடி சேராவிட்டால் இருந்த இடத்தை மட்டும் முடிந்த அளவு நினைவில் கொண்டு அதே இடத்தில் வைப்பார்.
  3. இப்படி இல்லாதபட்சத்தில் முறை மாறி மற்றவர் வெளையாடலாம். அவரும் அதே படி-2-இல் உள்ளவிதிகளின் படி.
  4. இப்படி முறை-மாற்றி விளையாடும் பொழுது, கடைசி சீட்டு ஜோடி சேர்ந்தபின் இருவரில் யார் அதிகமாக ஜோடிகள் சேர்த்தாரே அவர், அவர்களது அணி வெற்றிபெற்றதாகும்.
உயிரெழுத்து ஜோடி சேர்க்கும் ஆட்டம் முடிவில்
இரண்டாம் ஆட்டம் முடிந்த பின் சீட்டுகள்; மனைவி இடது பக்கம் – நான் வலது பக்கம். யார் வெற்றி என்பது கேட்கவே வேண்டாம்!

இந்த விளையாட்டு தான் உயிரெழுத்து நினைவகம். கொரோனாவின் ஊரடங்கு காலத்தில் இதை நீங்கள் வீட்டில் விளையாடலாம். எதுவும் சிறப்பாக திருத்தம் செய்யலாம் என்றால் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.

நனறி.

-முத்து