வாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1

இடம்தானியங்கி கார்கள் வரலாறு. வலம்: செயற்கை நுண்ணறிவு பின்னல்கள்

சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. முழு நேர வேலைகளில் இந்நூல்கள் உதவும் என்ற எதிர்பார்ப்புடன் இவற்றை படிக்க முயற்சி.

முதல்நூல் தானியங்கி கார்களின் வரலாறு பற்றியும் அதன் வளர்ச்சி, சமகால நிலை மற்றும் முதல்நிலை மாந்தர்கள் பற்றியும் உள்ளானது. அதாவது சிக்கல என்ன என்றால் “கார் ஓட்டுனர் இல்லாமல் எப்படி தோடக்க இடத்தில் இருந்து பயணர்கள் செல்லும் இடத்திற்கு விபத்துகள் இல்லாமல் குறுகிய காலத்தில் செல்லும்” என்று கொள்ளலாம். இது டார்பா , அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தோடங்கி ஜீஎம்கூகிள் மற்றும் பல சமகால நிறுவனங்களின் கார்கள், திட்டங்கள் பற்றி சொல்கின்றது.

அடுத்த புத்தகம் பற்றி அடுத்த பதிவில் :). மனிதன் தமிழ்தான் முதலில் பேசியதை நகைத்து புதுமைப்பித்தன் “முதல் குரங்கு தமிழ்க்குரங்கு,” என்பதை (கீழடி பற்றிய ஊடக நிகழ்வில்) பத்திரிகையாளர் மாலன் நினைவுபடுத்தினார். இறண்டாவது, மூன்றாவது ரோபோ தமிழ் பேசவைக்கலாம் – ஏனெனில் நீங்களே பிரம்மா!