தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (3) – மறைந்த மெய் புள்ளிகள்

இந்த வார பகுதியில் ஒரு வித்தியாசமான சிக்கலைப்பற்றி பேசலாம், முன்னரே எழுதிய பகுதிகளை இங்கு காண்க; அதாவது ஒரு எழுத்துணரியின் வழியாக தயாரிக்கப்பட்ட தமிழ் சொற்றொடரில் சில சமயம் மெய் புள்ளிகள் மறைந்துவிடுகின்றன. இது சற்றி இயந்திர கால சிக்கல் என்றால் அப்போது கல்வெட்டுக்களிலும் நூற்றாண்டின் நாளடைவில் இப்படிப்பட்ட சிக்கல்கள் தோன்றுகின்றன; ஆகவே இது தனிப்பட்ட ஒரு சிக்கல் இல்லை என்பதும் புலப்படுகின்றது. இந்த வலைப்பதிவில் உள்ள அல்கோரிதத்தை இங்கு ஓப்பன் தமிழ் நிரலாக காணலாம்.

1. அறிமுகம்

எனக்கு இந்த சிக்கல் இருப்பதன் காரணம், 1910-இல் ஆர்டன் பாதரியார் இயற்றிய “A progressive grammar of common Tamil,” என்ற நூலின் மறுபதிப்பு பிரதியில் சில/பல சொற்கள் விட்டுப்போயிருந்தன. மறுபதிப்பு செய்யும் நிறுவனமோ, கலிபோர்னியா லாசு ஏஞ்சலஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரதியினில் இருந்து எப்படியோ (கூகிள் புத்தகங்கள் வழியாகவா?) ஒரு புத்தகத்தின் மின்வடிவத்தை சரிபார்க்காமல் அப்படியே அச்சு செய்து அமேசான் சந்தையில் விற்று அதுவும் என் கைக்கு கிடைத்தது. பல இடங்களில் மெய் புள்ளிகளின் மறைவு – சொற்பிழைப்போல் பாவிக்கும் இந்த பிழைகள் இந்திர வழி செயல்திருத்தத்தால் நுழைக்கப்பட்டவை. நுழககபபடடவை!

மெய் புள்ளிகளின்றி செம்புலப்பொயல்நீரார் கூற்றி சங்க இலக்கியத்தில் இருந்து இப்படியே தோன்றும்,

யாயும ஞாயும யாராகியரோ

எநதையும நுநதையும எமமுறைக கேளிர

இதனை எப்படி நாம் சீர் செய்வது? இதுதான் நமது இன்றைய சிக்கல்.

2. அல்கோரிதம்

உள்ளீடு

  • சொல் என்பதை எழுத்துச் சரமாக தறப்படுகிறது. இதனை சொ என்ற மாறியில் குறிக்கின்றோம்.

வெளியீடுகள்

  • மறைந்த மெய்கள் இருந்தால் அவற்றை மற்றும் திருத்தி புதிய சொல் வெளியீடு செய்வதற்கு.

அல்கோரிதம்  முன்-நிபந்தனைகள்

  1. உள்ளீட்டு சரம் என்பதில் வேறு எந்த சொற்பிழைகளும் இல்லை
  2. சரம் என்பதின் இடம் ‘‘ என்பதில், சரம் எழுத்து சொ[இ] என்ற நிரலாக்கல் குறியீட்டில் சொல்கின்றோம்.
  3. சரம் எழுத்து சொ[இ], தமிழ் எழுத்தாக இல்லாவிட்டால் அதனை நாம் பொருட்படுத்துவதில்லை
  4. சரம் எழுத்து சொ[இ], உயிர், மெய், உயிர்மெய் (அகர வரிசை தவிர்த்து), ஆய்த எழுத்து என்றாலும் அவற்றில் எவ்வித செயல்பாடுகளையும் செய்யப்போவதில்லை
  5. ஆகவே, சரம் எழுத்து சொ[இ] என்பது உயிர்மெய் எழுத்தாக அதுவும் அகரவரிசையில் {க, ச, ட, த, ப, ர, .. } இருந்தால் மட்டும் இதனை செயல்படுத்துகின்றோம்.

அல்கோரிதம்  செயல்பாடு

  1. மேல் சொன்னபடி, நாம் கண்டெடுக்க வேண்டியது உள்ளீட்டு சரத்தில் அகரவரிசை உயிர்மெய்களில்  சரியான உயிர்மெய் எழுத்து வருகிறதா அல்லது மெய் புள்ளி மறைந்து வருகிறதா என்பது மட்டுமே!
  2. இதனை சறியாக செய்தால் அடுத்த கட்டமாக பிழைஉள்ள இடங்களில் புள்ளிகளை சேற்றுக்கொள்ளலாம்
  3. மேல் உள்ள 1-2 படிகளை அனைத்து சொல்லின் அகரவரிசை உயிமெய்களிலும் சயல்படுத்தினால் நமது தீர்வு கிடைக்கின்றது.

இதன் மேலோட்டமான ஒரு முதற்கண் தீற்வை பார்க்கலாம் (இதனை மேலும் சீர்மை செய்ய வேண்டும்),

அல்கோரிதம் இதற்கு ஒத்தாசை செய்ய மேலும் கூடிய அல்கோரித செயல்முறைகளான “அகரவரிசை_மெய்”, “புள்ளிகள்_தேவையா” மற்றும் “புள்ளிகள்_சேர்” என்றவற்றையும் நாம் சேரக்க்வேண்டும்.

நிரல்பாகம் மறைந்த_மெய்_புள்ளியிடல்( சொல் )

திருத்தம்_சொல் = ""

@(சொல் இல் எழுத்து) ஒவ்வொன்றாக
   விடை = 0
   @( அகரவரிசை_உயிர்மெய்( எழுத்து ) ) ஆனால்  
      விடை = புள்ளிகள்_தேவையா( சொல், எழுத்து )
   முடி
   @( விடை ) ஆனால்
      திருத்தம்_சொல் += புள்ளிகள்_சேர்( எழுத்து )
   இல்லை
      திருத்தம்_சொல் += எழுத்து
   முடி
முடி
பின்கொடு திருத்தம்_சொல்
முடி

நிரல்பாகம் அகரவரிசை_உயிர்மெய்( எழுத்து )
   அகரவரிசை_உயிர்மெய்கள் = 'கசடதபறயரலவழளஞஙனநமண'
   பின்கொடு அகரவரிசை_உயிர்மெய்கள்.இடம்(எழுத்து) != -1
முடி

நிரல்பாகம் புள்ளிகள்_சேர் ( எழுத்து )
   அகரவரிசை_உயிர்மெய்கள் = 'கசடதபறயரலவழளஞஙனநமண'
   அகரவரிசைக்குள்ள_மெய் = ['க்','ச்','ட்','த்','ப்','ற்',
                         'ய்', 'ர்','ல்','வ்','ழ்','ள்',
                         'ஞ்', 'ங்', 'ன்','ந்','ம்','ண்']
   இடம் = அகரவரிசை_உயிர்மெய்கள்.இடம்( எழுத்து )
   பின்க்கொடு அகரவரிசைக்குள்ள_மெய்[ இடம் ]
முடி

பொதுவாக நம்மால் புள்ளிகள்_தேவையா என்ற செயல்பாட்டை சரிவர முழு விவரங்களுடன் எழுதமுடயாது. இது கணினிவழி உரைபகுப்பாய்வுக்கு ஒரு தனி கேடு. அதனால் நாம் புள்ளியியல் வழி செயல்படுவது சிறப்பானது/சராசரியாக சரிவர விடையளிக்கக்கூடிய செயல்முறை.

3. மாற்று அல்கோரிதம்

மேல் சொன்னபடி உள்ள கட்டமைப்பில் புள்ளிகள் தேவையா என்பதன் ஓட்ட நேரம் (runtime), கணிமை சிக்கலளவு (computational complexity) பற்றி பார்க்கலாம்.

உதாரணமாக, “கண்னன்” என்று எடுத்துக்கொண்டால் அது அச்சாகுமபொழுது “கணனன” என்று அச்சாகிறது என்றும் கொள்ளலாம். நமது அல்கோரிதத்தின்படி இதில் நான்று இடங்களில், அதாவது அத்துனை எழுத்துக்களுமே அகரவரிசை உயிமெயகளாக அமைகின்றன. இவற்றில் எந்த ஒது எழுத்தும் உயிர்மெய்யாக இருக்கலாம் (அச்சிட்டபடியே), அல்லது மாறியும் புள்ளி மறைந்த மெய்யாகவும் இருக்கலாம்.

அதாவது, “கணனன” என்ற சொல்லை மொத்தம் உள்ள வழிகளாவது இவற்றின் பெருக்கல்:

என்ற எழுத்தில் இரண்டு வழிகள்

என்ற எழுத்தில் இரண்டு வழிகள்

என்ற எழுத்தில் இரண்டு வழிகள்

என்ற எழுத்தில் இரண்டு வழிகள்

மொத்தம் 2 x 2 x 2 x 2 = 24 = 16 வழிகள் உள்ளன.

இதனை பொதுப்படுத்தி சொன்னால்,

  • நீ என்ற எண் நீளம் உள்ள சொல்லில் (அதாவது, நீ = |சொல்|) என்ன நடக்கின்றது என்றால்,
  • நீ1 என்ற எண் சொல்லின் உள்ள அகரவரிசை உயிர்மெய்களை குறிக்கும் என்றால், 
  • நீ1 ⩽  நீ,
  • மொத்தம் நாம் பரிசோதிக்க வேண்டிய வழிகள், 2நீ1

இது விரைவில் பொறிய அளவு வளரும் ஒரு தொகை, இதனை exponentially fast, அதிவேகமாக வளரும் கணிமை என்றும் சொல்லாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் இதனை எளிதாக வழிகள் தோன்றும் படி மட்டும் விடைகள் தேடினால் நமது செயல்பாடு விரைவில் முடியவே முடியாது – இதற்காக branch and bound என்ற செயல்முறைகளை பயன்படுத்தவேண்டும்.

#இந்த நிரல்பாகம், 2நீ1 என்ற ஓட்ட நேரத்தில் இயங்கும்
நிரல்பாகம் புள்ளிகள்_தேவையா_உதவியாளர்( முதல்_ஒட்டு, சந்தித்காதவை )
   @( நீளம்( சந்தித்காதவை ) == 0 )
         பின்கொடு [முதல்_ஒட்டு]
   முடி
   விடைகள் = []
   எழுத்து = சந்தித்காதவை[0]
   @( அகரவரிசை_உயிர்மெய்( எழுத்து ) ) ஆனால்
         #உள்ளபடியே இந்த இடத்தில் மெய் இல்லை என்றவழியில் யுகிக்க
         விடைகள்1 = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்(முதல்_ஒட்டு + எழுத்து, சந்தித்காதவை[1:])
         விடைகள்.நீட்டிக்க( விடைகள்1 )

         #உள்ளபடியே இந்த இடத்தில் மெய் வந்தால் எப்படி இருக்கும் என்ற்வழியில் யுகிக்க
         மெய்எழுத்து = புள்ளிகள்_சேர்( எழுத்து )
         விடைகள்2 = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்(முதல்_ஒட்டு + மெய்எழுத்து, சந்தித்காதவை[1:])
         விடைகள்.நீட்டிக்க( விடைகள்2 )
   இல்லை
         விடைகள்3 = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்(முதல்_ஒட்டு + எழுத்து, சந்தித்காதவை[1:])
         விடைகள்.நீட்டிக்க( விடைகள்3 )
   முடி
   பின்கொடு விடைகள் 
முடி

நிரல்பாகம் மறைந்த_மெய்_புள்ளியிடல்(சொல்)
    #யுகிப்பு சார்பு என்பது n-gram புள்ளியியல் கொண்டு 
    #சொல்லின் புள்ளிகள் சோர்க்கப்பட்ட மாற்றங்களை மதிப்பிடும்.
    மாற்று_சொற்கள் = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்( '', list(சொல்) )
    மதிப்பீடுகள் = யுகிப்பு_சார்பு( மாற்று_சொற்கள் )
    இடம் = அதிக_மதிப்பெண்_இடம்( மதிப்பீடுகள் )
    சரியான_மாற்று_சொல் = மாற்று_சொற்கள்[ இடம் ]
    பின்கொடு சரியான_மாற்று_சொல்
முடி

மேல் சொல்லப்பட்டபடி கணினி அல்கோரிதப்படுத்திப்பார்த்தால் ‘கணனன’ என்ற சொல்லிற்கு, 16 மாற்றுகள் கிடைக்கும். அவையாவன,

['கணனன',
 'கணனன்',
 'கணன்ன',
 'கணன்ன்',
 'கண்னன',
 'கண்னன்',
 'கண்ன்ன',
 'கண்ன்ன்',
 'க்ணனன',
 'க்ணனன்',
 'க்ணன்ன',
 'க்ணன்ன்',
 'க்ண்னன',
 'க்ண்னன்',
 'க்ண்ன்ன',
 'க்ண்ன்ன்']

இந்த விடையின் மாற்று சொற்களை unigram அல்லது bigram யுகிப்பு சார்புகளின்படி மதிப்பிட்டால் கீழ்கண்டவாறு கிடைக்கின்றது,

[(‘க்ண்ன்ன்‘, 28.0),
(‘க்ணன்ன்’, 24.83912971793407),
(‘க்ண்னன்’, 24.39197168659185),
(‘க்ண்ன்ன’, 24.0),
(‘கண்ன்ன்’, 23.60384297446045),
(‘க்ணனன்’, 21.231101404525926),
(‘க்ணன்ன’, 20.83912971793407),
(‘கணன்ன்’, 20.44297269239452),
(‘க்ண்னன’, 20.39197168659185),
(‘கண்னன்‘, 19.9958146610523),
(‘கண்ன்ன’, 19.60384297446045),
(‘க்ணனன’, 17.231101404525926),
(‘கணனன்’, 16.834944378986375),
(‘கணன்ன’, 16.44297269239452),
(‘கண்னன’, 15.995814661052302),
(‘கணனன’, 12.834944378986375)]
(‘க்ண்ன்ன்’, -11.553147747485053)]

இந்த சமயம் நமக்கு சரியான விடைகிடைக்கவில்லை; இதனுடன் அகராதிபெயர்கள் அல்லது classification செயற்கைப்பின்னல்களை பயன்படுத்திப்பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது.

இந்த அல்கோரிதத்தை ஓப்பன்-தமிழ் பைத்தான் நிரலாக எழுதினால் இப்படி:

# -*- coding: utf-8 -*-
# (C) 2020, முத்து அண்ணாமலை.
# இந்த நிரல் துண்டு MIT உரிமத்தில் வெளியிடப்பட்டது
import tamil
from pprint import pprint
import operator
from solthiruthi.scoring import bigram_scores, unigram_score
chol = tamil.utf8.get_letters("கணனன")
def mean(x):
return sum(x)/float(len(x))
def pulligal_helper(prefix,letters):
if len(letters) == 0: return [prefix]
letter = letters[0]
result = []
if letter in tamil.utf8.agaram_letters:
result1 = pulligal_helper( prefix + letter, letters[1:])
mei_letter = letter + tamil.utf8.pulli_symbols[0]
result2 = pulligal_helper( prefix + mei_letter, letters[1:])
result.extend(result1)
result.extend(result2)
else:
result1 = pulligal_helper( prefix + letter, letters[1:])
result.extend(result1)
return result
def pulligal_branch_bound(prefix,letters,அகராதி):
""" we restrict options if its not a prefix in dictionary """
if len(letters) == 0: return [prefix]
letter = letters[0]
result = []
prefer = அகராதி.starts_with(prefix)
if letter in tamil.utf8.agaram_letters:
alternate2 = prefix + mei_letter
if அகராதி.starts_with(alternate2) or prefer:
mei_letter = letter + tamil.utf8.pulli_symbols[0]
result2 = pulligal_branch_bound( alternate2, letters[1:])
result.extend(result2)
alternate1 = prefix + letter
if அகராதி.starts_with(alternate1) or prefer:
result1 = pulligal_branch_bound( alternate1, letters[1:])
result.extend(result1)
return result
#sort in descending order
result_tpl = [("".join(sol),(-1.0*unigram_score(sol))) for sol in pulligal_helper("",chol)]
result_tpl = sorted(result_tpl,key=operator.itemgetter(1),reverse=True)
pprint(result_tpl)
"""
['கணனன',
'கணனன்',
'கணன்ன',
'கணன்ன்',
'கண்னன',
'கண்னன்',
'கண்ன்ன',
'கண்ன்ன்',
'க்ணனன',
'க்ணனன்',
'க்ணன்ன',
'க்ணன்ன்',
'க்ண்னன',
'க்ண்னன்',
'க்ண்ன்ன',
'க்ண்ன்ன்']
#bigram score
[('கணனன', -12.834944378986375),
('கணனன்', -16.834944378986375),
('கணன்ன', -16.44297269239452),
('கணன்ன்', -20.44297269239452),
('கண்னன', -15.995814661052302),
('கண்னன்', -19.9958146610523),
('கண்ன்ன', -19.60384297446045),
('கண்ன்ன்', -23.60384297446045),
('க்ணனன', -17.231101404525926),
('க்ணனன்', -21.231101404525926),
('க்ணன்ன', -20.83912971793407),
('க்ணன்ன்', -24.83912971793407),
('க்ண்னன', -20.39197168659185),
('க்ண்னன்', -24.39197168659185),
('க்ண்ன்ன', -24.0),
('க்ண்ன்ன்', -28.0)]
# unigram score
[('கணனன', -7.5531477474850535),
('கணனன்', -8.553147747485053),
('கணன்ன', -8.553147747485053),
('கணன்ன்', -9.553147747485053),
('கண்னன', -8.553147747485053),
('கண்னன்', -9.553147747485053),
('கண்ன்ன', -9.553147747485053),
('கண்ன்ன்', -10.553147747485053),
('க்ணனன', -8.553147747485053),
('க்ணனன்', -9.553147747485053),
('க்ணன்ன', -9.553147747485053),
('க்ணன்ன்', -10.553147747485053),
('க்ண்னன', -9.553147747485053),
('க்ண்னன்', -10.553147747485053),
('க்ண்ன்ன', -10.553147747485053),
('க்ண்ன்ன்', -11.553147747485053)]
"""

மேலும், செம்புலப்பெயல்நீரார் கூற்றை மெய்கள் சேர்த்தால், இப்படி வருகின்றது. இதில் 7-இல் ஆறு சொற்கள் சரியாவருகிறது.

  1. [(‘யாயும்‘, 20.0), (‘யாயும’, 16.0)]
  2. [(‘ஞாயும்‘, 20.0), (‘ஞாயும’, 16.0)]
  3. [(‘யாராகிய்ரோ‘, 36.0), (‘யாராகியரோ‘, 31.94703511524359)]
  4. [(‘எந்தையும்‘, 32.0),(‘எநதையும்’, 28.83912971793407),(‘எந்தையும’, 28.0),(‘எநதையும’, 24.83912971793407)]
  5. [(‘நுந்தையும்‘, 36.0),
    (‘நுநதையும்’, 32.83912971793407),
    (‘நுந்தையும’, 32.0),
    (‘நுநதையும’, 28.83912971793407)]
  6. [(‘எம்முறைக்‘, 32.181004231607204),
    (‘எமமுறைக்’, 28.543012694821613),
    (‘எம்முறைக’, 28.181004231607204),
    (‘எமமுறைக’, 24.543012694821613)]
  7. [(‘கேளிர்‘, 20.0), (‘கேளிர’, 16.0)]

மேலும் தொடர்புக்கு உங்கள் விவரங்களை இங்கு சேர்க்கவும்.

தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (2) – இரட்டைக்கிளவி, ஜதி

1 கேள்வி

ஏற்கணவே எழுதிய கட்டுரை கீற்றில் தமிழ் கட்டுரைகளில் எப்படி பால் ஓற்றுமை படுத்துவது என்ற கேள்வியைப்பற்றி கண்டோம். இன்று, தமிழில் எப்படி இரட்டைக்கிளவி சொற்கள், பரத நாட்டிய/கருநாடக இசையில் ஜதி சொற்கள், என்பதை கணினியால் சுயமாக அறியமுடியும் என்ற கேள்வியைப்பற்றி பார்க்கலாம். விடைகள் என்னிடம் இருந்தால் INFITTக்கு முதல் ஆளாக கட்டுரை எழுதிருபேன் இல்லையா ஹஹா ;).

முதன்மையில் இவ்வை சொற்கள், இரட்டைக்கிளவி மற்றும் ஜதி சொற்கள், ஒருவகையான இசைவுத்தன்மையை சொல்பவை. இதனை, மற்ற மொழிகளிலும் காணலாம் – முதன்மையாக ஆங்கிலத்தில் இதனை Onomatopoeia என்றும் சொல்கின்றனர்.

தமிழ் சினிமா இசை பாடல்களில், செய்யுள்களில், என பல இடங்களில் சீசீ இங்தப்பழம் புளிக்குது என்று சொல்லும் சுடசுட கிசுகிசு பத்திரிகைகளிலும் எல்லாஇடத்திலும் பரவலாக உள்ள தமிழ் சொல்லாடல் அம்சமாக விளங்குகின்றது இந்த இரட்டைக்கிளவி.

உதாரணம், இந்த 1998-இல் வெளிவந்த ஜீன்ஸ் படப் பாடலான “கண்ணோடு காண்பதெல்லாம்…” பாடலில் இரட்டைக்கிளவி, மற்றும் ஜதி சொற்கள் இடம் பெருகின்றன:

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

தமிழில் சராசரி சொல்லாடல்களை சற்று விக்கிப்பீடியாவில் கண்டால் அவர்கள் பட்டியலில் வருவதாவது,

  1. கிடுகிடு பள்ளம் பார்த்தேன்
  2. கிளுகிளு படம் பார்த்தாராம்
  3. கிறுகிறு என்று தலை சுற்றியது
  4. கீசுகீசு என குருவிகள் கத்தின
  5. குசுகுசு என்று அதை சொன்னார்
  6. குடுகுடு கிழவர் வந்தார்
  7. குபுகுபு என குருதி கொட்டியது
  8. கும்கும் என்றும் குத்தினார்
  9. குளுகுளு உதகை சென்றேன்

சில கேள்விகள்

  1. இவற்றில் எப்படி இந்த சொற்களின் திரும்பத்திரும்ப வரும் தன்மையை ஒரு விதிகளால் அல்லது ஒரு சூத்திரத்தினால் குறிக்கமுடியும் ?
  2. இப்படி குறிக்கமுடியுமா, இல்லையா ?
  3. இவாறு எழுதப்பட்ட சூத்திரம் அல்லது நிரல் சார்புகளினால் இந்த பட்டியல்கள் தானியங்கியால் குறிக்கப்படும் இரட்டைக்கிளவி, குறிக்கப்படாத இரட்டைக்கிளவி என்று இருவகைபடுத்தப்படுமா ?

2 சில் விடைக்கான எண்ணங்கள்

2.1 Regular Expression

எனது அனுபவத்தில், இதன் தானியங்கி விதிகள் regular expression என்ற சார்ககத்தினால் எந்த ஒரு உரையிலும் கண்டெடுக்கலாம் என்றும் எண்ணுகின்றேன் – (தமிழில் regular expression-களை ஓப்பன் தமிழ் நிரல் திரட்டில் நீங்கள் பார்க்கலாம்) – எனினும் இது எளிதான செயல் அல்ல – அதுவும் கணினி நினைவகம்/இயக்கும் நேரம் big-O சிக்கல் அளவுகளில் சிக்கனமாகவும் துரிதமாகவும் இந்தவகைச்சேவைகளைச்செய்வது ஒரு கடினமான காரியம்.

pattern = u"^[க-ள].+[க்-ள்]$"

data = [u"இந்த",u"தமிழ்",
        u"ரெகேஸ்புல்",
        u"\"^[க-ள].+[க்-ள்]$\"",u"இத்தொடரில்", u"எதை", u"பொருந்தும்"]
output = match(data, pattern)
expected = [1,2,6] # i.e.தமிழ்

2.2 செயற்கையறிவு பின்னல்கள் / எந்திரவழி கற்றல்.

மற்ற ஒரு தீர்வு செயற்கையறிவு, ஆழக்கற்றலினால் வரும் என்றும் சொல்லலாம். இந்த கேள்வியை ஒரு classification பகுப்பாய்வு எந்திரவழிகற்றலாக கணினியிடம் நியமித்து, விக்கி மற்றும் பல இடங்களில் இருந்து தரவுகளை தயாரித்து இந்த செயற்கைப்பின்னலை பயிற்சிஅளித்தால் அது நேரம் போகையில் அது திறன்களைப்பொரும்.

மேலும் – ஒரு நல்ல sequence-to-sequence வழியாக கட்டமைக்கப்பட்ட செயற்கையறிவு மாதிரி பின்னல் நாம் சொல்லிக்கொடுத்ததைவிட அதிகமாகவே கற்றிருக்கும் தன்மையையும் நாம் பார்க்கக்கூடும் என்று யுகிக்கக் தோன்றுகிறது.

இது இன்றைக்கு உள்ள சிக்கல்.

 

குவாண்டம் கணிமை

குவாண்டம் நிலைகள் என்பவை நுன்உலக செயல்பாட்டின் குவாண்டம் விதிகளை கொண்டு அதன் முக்கிய அம்சமான entanglement (நிலை சிக்கல்பாடு) மற்றும் superposition (பல் நிலைப்பாடு) என்ற விதிகளினைகொண்டு புதுவிதமாக பல்னிலைகளை ஒரே நேரத்தில் அனுகும் வகை நிரல்கள்; இவற்றை எழுத முற்படும் தொழில்னுட்பம் குவாண்டம் கணிமை.

இதில் சிந்திக்கவும், இயற்பியல் அறிவினை கணிமையில் கலக்கவும் மாற்றுத்திசையில் சிந்தனைகள் ஊடுறுவவும் செய்வதினால் பல விடைகள் தீராத கணிமை சிக்கல்களுக்கு விடை கிடைக்கும் என்று அறிவியலாளர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்சமயம் 20இல் இருந்து 30 குவாண்டம் பிட்கள் கூபிட் என்ற அளவிலான கணிதங்களை சராசரி கணினியில் பரிசோதனையாகவும் NMR, Ion Trap, SQUID வழிமுறை குவாண்டம் கணினியிலும் செயல்படுத்த முடிகின்றது. இந்த நிலை விரைவில் (சில ஆண்டுகளில்) மாறலாம்.

மேலும் படிக்க பல சுட்டிகள் – https://github.com/desireevl/awesome-quantum-computing