Google-இல் பொறியாளர் வேலை

உலகில் தலைசிறந்த பொறியாளர் ஆண்-பெண்கள் Google-இல் வேலை செய்வதாக கேள்வி. ஆமாம் நனும், நீங்களும் தினமும் கோடு, ரோடு எல்லம் தான் காலா காலமாக போடுகிரோமே அப்படி கூகிளில் என்ன புளியகரச்சு ஊத்திராங்க ?

படம்: கணினி பொறியாளர் வேலைக்கு தயாராக்கும் நேர்க்காணல் புத்தகங்கள்!

சரி.

இதுதாங்க – நம்ம திக்கி தினரி, Stack-Overflowவில் பார்த்து விடை காணுவதில்லாமல் அல்கோரிதங்களில் புலியாகவும் இருப்பது இவர்களின் முதன்மை சிறப்பு!

நீங்கள் இந்தவகை பன்னாட்டு நிறுவனங்களில் அல்லது, உயர்நிலை கணினி தொழிலில் நிரலாளராக வேலை பார்க்க சில படிகள் உண்டு.

  1. ஒரு கணினி பொறியியல் பட்டம் பெற்றும், அதில் கணினி நிரல்கள் வடிவமைப்பதில் வித்தகராக தேற்சி பெருங்கள். இது இல்லட்டியும் பரவாயில்லை.
  2. சில பிரசித்தி பெற்ற வலைப்பூ இருக்கிரது – அவற்றையும் படியுங்கள்; 1 இணைப்பு, 2 இணைப்பு
  3. சில நேர்காணல் புத்தகங்களைப் படியுங்கள்; இவை
    1. ‘Cracking the coding interview,’ – Gayle Laakman இங்கு
    2. ‘Programming interviews exposed’ – John Morgan, et-al இங்கு
  4. சில நல்ல கணினி செயல்முறை புத்தகங்கள் பற்றியும் படியுங்கள்; இவை பற்றி முதல், இரண்டாம் கட்டுரைகள் எற்கணவே இங்கும் [முதல்], இங்கும் [இரண்டு].

இவைகளை நீங்கள் படித்தும், இவற்றில் உள்ள பயிற்சி பாடங்களை கணக்கிட்டும், தீர்வு கண்டும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் முயன்றால் நல்ல விளைவுகள் கிட்டும். கண்டிப்பாக நீங்கள் ஒரு வளர்ச்சி பெற்ற பொறியாளர் ஆவீர்கள்!