எழில் : முதல் பக்கம் வடிவமைப்பு

முதல் பக்கம் என்றாலே கொசம் சிக்கல். பிள்ளையார் சுழி, தென்னாடுடைய சிவனுக்கும் வணக்கம் எனவும் பல வணங்குத்தல்கள் உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு சிறப்பான ஒரு சின்னத்தை கொண்டு எழில் மொழியில் முதல் பக்கம் அமைக்கப்பட்டது.

small-ezhil-splash-5
படம் 1: எழில் மொழி முதல் பக்கம் – செயலியில் தொடங்குதல்.
எழில் – தமிழ் கணினி மொழி

“தமிழில் நிரல்படுத்தி கணிமை பழகுவோம்!” என்பது புதிய கொள்கை

படம் சில மணி நேரம் முன்னேற வடிவமைக்கப்பட்டது. எந்த தமிழ் எழுத்துருக்கள் என்று சொல்லமுடியுமா உங்களால் ?

நன்றி

-முத்து

 

 

தமிழ் 99 விசை பலகை இடைமுகம் – Tamil99 keyboard interface for Ezhil

கணினியை பார்க்காத சிறுவன் எப்படி உள்ளீடு செய்வான் ? தமிழில் எழில் மொழி ஆர்வலர்கள் பாதிக்குமேல் நிரல் உள்ளீடு செய்வதற்கு தனி தமிழ் விசைப்பலகை இல்லை. இந்த பிரச்சினைகளை தீர்வு செய்ய ஏற்கனவே சில மூன்று பட்டை உள்ளீடு பட்டன்-களை கண்டோம். தற்போது முழு விசை பலகை (keyboard) இடைமுகம் ஒன்றை உருவாக்கி மேம்படுத்தி வருகிறேன்.

ezhil_March20_2017
படம் 1: Tamil 99 keyboard interface for Ezhil editor; தமிழ் 99 விசைப்பலகை இடைமுகம் எழுதியில். 

உங்களுக்கு எதுவும் கருத்துள்ள பின்னூட்டங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

நன்றி.

 

எழில் தொகுப்பு – எண் புள்ளி ஒன்பது

எழில்எண்  புள்ளி ஒன்பது இன்று இரண்டு ஆண்டுகள் புள்ளி ஏழு ஏழு வெளியிட்ட பின் வருகிறது. முழு வரலாறு இங்கு.

பைதான் தொகுப்புகள் பெரும் தளத்தில் பெறலாம்: ‘pip install –upgrade ezhil’ என்று கொடுத்தாலே போதும்.

எழில் விரைவில் சில மாதங்களில் பொது பயன்பாட்டிற்கு தயார் நிலை அடைந்துவிடும்.

-முத்து

 

 

எழுதி – நிரலாக்கம் உள்ளீடு இடைமுகம்

எழில் மொழியை சிறுவர்கள் எப்படி கணினியில் தடச்ச்சு செய்ய பழகாதவர்கள் இதனை பயன் படுத்துவார்கள் ? இதனால் எழில் மொழியிலே ஒரு பயனும் அடையாமல் ஆகிவிடும் சந்தர்ப்பம் உள்ளதா ?

இது போன்ற பல கேள்விகள் என்னிடம் கேட்டவர்கள் உண்டு. அதற்க்கு விடை சமீபத்திய எழில் மொழியில் உள்ள ‘எழுதி’ செயலியின் மேம்பாடு  – சொடுக்கும் உதவி பட்டன்கள்.

ezhil_March11_2017
படம் 1: ‘எழுதி’-இல் உள்ள மூன்று பட்டைகளை உள்ள அடுக்கு பட்டன்கள் பல எழில் மொழி குறி சொற்களையும், எழில் மொழி வாக்கியங்களையும் இடைசொருகும் படி அமைக்கப்பட்டன. இது இன்னும் சில மேம்பாடுகள் பின் திரட்டி ஆக்க படும்.

Mac OS X-இல் எழில் இடைமுகம் (GUI) செயலி உருவாக்க நேரிடும் சவால்கள்

3platforms
படம் 1: எழில் மொழி செயலி மூன்று இயங்கு தளங்களில் கிடைக்கும் படி செய்ய திட்டமிட்டோம். ஆனால் மேக் OS X-இல் சற்று தடங்கல்கள் உள்ளன என்று இந்த பதிவில் தெரிவிக்கிறோம்.

சமீப காலமாக packaging எழில் என்பதில் எப்படி github-இல் உள்ள எழில் மொழி நிரல்களை ஒருங்கிணைத்து ஒரு திரட்டியாக செய்து பயனர்கள் தங்கள் கணினிகளில் நிறுவி செயல்படுத்தும் படி செய்யலாம் என்று வேளைகளில் இறங்கி உள்ளேன்.

விண்டோஸ் தளத்தில் 64-bit கணினிகளில் Windows 7, 8, 10, என்பதில் எழில் மொழி செறிவர நிறுவி வேலைசெகிறது என்று நான் பலரிடம் அவரவர்கள் நடத்திய பரிசோதனைகளில் உறுதிபடுத்தி கொண்டேன்.

லினக்ஸ் இயங்கு தளத்தில் எதுவும் ப்ரிச்சனை இருப்பதாக தெரியவில்லை. Ubuntu-விலும்  64-bit கணினியில் சரியாக வேலை செய்கிறது.

அனால் இந்த Mac OS-X இல் மட்டும் எழில் மொழி Github repo-வில் இருந்து console வழி மட்டும் செயல் படுகிறது. எழுதி செயலி window வழி graphical interface GTK-இனை சார்ந்து உள்ளதால் இதற்க்கு Mac OS-X இல் இயக்க சற்று சிக்கல்களாக உள்ளது. காரணம் PyGobject3  Windows மற்றும் Linux தலங்களுக்கு மட்டுமே நிறுவ தயார் நிலையில் உள்ளது. Mac OS-X இக்கு  Gtk-ஐ மூல நிரல்களில் இருந்து மட்டுமே நிறுவும் நிலை உள்ளது என்பதால் இதனை திரட்டி ஆக்குவதும், ‘எழுதி’ செயலியை இயக்குவதும் சற்று கஷ்டமாக / முடியாமல் போனது.

இந்நிலையில் Mac OS-X-இல் எழில் மொழி console இடைமுகம் செயலி நன்றாக வேலை செய்கிறது என்றும் பதிவு செய்கிறேன். வரும் நாட்களில் ஏதேனும் புதிய முன்னேற்றங்கள் இல்லாத பட்சத்தில் எழில் மொழி ‘எழுதி’ இடைமுகம் இந்த தளத்தில் கிடைக்காது – கட்டளை இடைமுகம் மட்டுமே கிடைக்கும்.

உங்களில் எவருக்கும் Mac OS X-இல் GTK அல்லது packaging வல்லமைகளை, பரிந்துரைகள் இருந்தால் பகிரவும்.

-முத்து,

சான் ஓசே, கலிபோர்னியா

கணிமையில் மகளிர் பங்களிப்பு – சர்வதேச மகளிர் தினம்

ezhil_March08_2017
படம் 1: எழில் திருத்தி ‘எழுதி’ இல் ‘பெர்னோல்லி எண்கள்’ (Bernoulli Numbers) என்பதை எளிதாக இயக்கி பயன்படுத்தலாம் என்று காட்டும்.

சர்வதேச மகளிர் தினம்க அன்று கணிமையில் மகளிர் பங்களிப்பு பற்றி ஒரு சிறிய கட்டுரை.

கணினி நிரலாக்கமே ஒரு உயர்குடி பிரிட்டிஷ் பெண்  அடா லவ்லேஸ்  தனது வாத்தியார் சார்லஸ் பபேஜ் அவரது “analytical engine” ஆதி-கணினியில் “Bernoullli Numbers,” (பெர்னோல்லி எண்கள்) கணக்கிட எழுதியதால் உருவானது. ஆனால் இவருக்கோ காலம் அப்படி எழுதிய நிரல் ஓடவே இல்லை – ஏன் என்றால் அந்த கணினியின் திறன் போதவில்லை. இது ஏற்கனவே இந்த வலைப்பதிவில் எழுதினேன்.

அடுத்த கட்டமாக கணிமையில் முக்கியமான “compiler” என சொல்லக்கூடிய “தொகுப்பி”-யை உருவாக்கியவர் அமெரிக்க பெண் கிரேஸ் ஹாப்பர் (Grace Hopper).

இவை இரண்டும் கணிமையில் டூரிங் முன் (Before Turing) அடா லவ்லேஸ், மற்றும் டூரிங் பின் (After Turing) கிரேஸ் ஹாப்பர் என்று சொல்லும் அளவிற்கு பெரிய சாதனைகள். கணிமை பெண்களினாலும் ஆனது, இல்லையேல் பேங்கினால் ஆனதா ? நீங்களே சொல்லுங்கள்.

இன்னும்  எங்கள் எழில் திட்டத்தில் பங்களித்த பெண்கள் பற்றி இங்கு – சென்ற ஆண்டு எழில் “கால்சீ” திட்டத்தில் பங்களித்த ப்ரியா, “எழில் கையேடு,” படம் “வரைந்த” வியட்நாமிய ப் பெண், அவர்களுக்கு நன்றி.  சென்ற ஆண்டு எழில் பற்றி ஊக்கம் அளித்த குடும்பத்தினர் – மனைவி, மற்றும் தாய்  அவர்களுக்கு நன்றி.

இன்று எழில் மொழியை பேக்கஜ் செய்யும் பணியில் ஆகிய முன்னேற்றம் பற்றி ஒரு மேம்பாடு செய்யப்பட்ட திரை-சேமித்த-படம்; இதில் ‘பெர்னோல்லி எண்கள்’ (Bernoulli Numbers) என்பதை எளிதாக இயக்கி பயன்படுத்தலாம் என்று காட்டும்.

எழில் எங்கே போகிறது ?

ezhil_March1_2017.png
படம் :  திருத்தியுடன்  எழில் மொழி  செயலி; நிரல் இடது பக்கம், இயக்கிய வெளியீடு வலது பக்கம். சாளரத்தின் கீழ் இயக்கிய விவரம். இந்த செயலி எழில் படிக்க உதவும்.       (c) 2017 எழில் மொழி அறக்கட்டளை.

 

“எழில் மொழியை எப்படி வெளியீடு செய்வது ?” என்று சப்பென்று தலைப்பை வைத்து மேலும் ஒரு பதிவை எழுதலாம் என்று தொடங்கினேன். அனால் இன்று எனக்கும் பொறுமைக்கும் நீண்ட தூரம் ஆயிற்று. நம்ம மண்ணில் ஜே.கே. போன்றவர் இருந்ததாக கேள்வி, என்னமோ அவர் ஆசியில் ஒரு தலைப்பு. சில வெளிப்பாடுகள் அதுவாக வரவேண்டும், ஸ்வயம்பு போல.

“ஆளே இல்லாத கடையில ஏண்டா டீ ஆத்தூர்?” நக்கலுக்கு தமிழ் எந்த மொழியிர்க்கும் சளச்சது இல்லை. சிலர் நேரில் என்னை, சற்று வெகுளி தனமாக – இங்கு அமெரிக்காவில் முதல் தலைமுறை தமிழர் (எழுதவோ, நல்லா பேசவோ சாகஜமாக வராதவர்) – “ஏன் நீங்கள் தமிழில் மென்பொருள் ரீதியில் செயல்படுகிறீர்கள்” என்று கேட்டார்; என்னமோ செவ்வாயில் குடிபுகுவது போல நான் செய்யும் வேலைகள் எனது நண்பர்களிடமும், முகம் அறியா இணைய நபர்களிடமும் தெரியும். தமிழில் செயல்படுவது எனது சுய உறிமை, சில நேரம் பெருமை, தன்னிரக்கம், அகராதி என்றும் பலர் கூறலாம்; ஆனால், அதில் சமூக பொறுப்பு, அறிவியலாளரின் சமூக பார்வை, அறிவியல் மொழி வளர்ச்சி, தேடல், தொழில்நுட்ப கண்டெடுப்பு, தியானம் போன்ற நுட்ப்பமான  விஷயங்களை மறந்து விடுவார்கள். சில நேரங்களில் எழில் எங்கே போகிறது என்று எண்ணுவேன்; ஆனால் முதலில் அந்த எட்டு வயது குழந்தைகள் நிரலாக்கத்தை தமிழ் வழி கற்பிக்கும் பொது தமிழ் கணிமை உலகம் நாம் அனைவரும் கூடி கண்ட வெற்றி என்பதில் ஐயமில்லை.

எழில் மொழி என்பது பல ஆண்டுகளாக  நான் செய்து வருவது; இதனை முழுமையாக 2013 ஆண்டில் பொது வெளியீடு செய்து இந்நாள் வரை பத்து பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்திற்கும், அறிவிற்கும் லாபம் பொருட்படாமல் பங்காளித்துள்ளனர். தமிழ் நெஞ்சங்கள் எங்கும் ஆதரவு அளித்துள்ளனர். அனால் இவர்களின் வேலைகளும் எழில் மொழியில் இலக்கான சிறுவர் கணிமை கற்றலுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று எனக்கு பல நாட்கள் தூக்கம் தொலைந்து போனது.

சமீபத்தில் சில மாறுதல்கள்; எழில் கிட்ஹப்-இல் இருந்தாலும் இதனை ஒரு முழுமை அடைந்த மென்பொருளாக கொள்ள முடியாது. மென்பொருள் என்றால் அதற்க்கு பயனாளர்களின் தேவைகளையும், அவசியமான பயன்பாட்டுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா மூல நிரலை மூஞ்சியில் விட்டு எறிஞ்சால் யாருக்கும் பயன்படாது.  என்னமோ கோவத்தில் எழுதி விட்டதாக நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுய விமர்சனமாக எனக்கு கொள்ளுங்கள்.

எழில் மொழியை கடைசி end-user பயனாளர்கிடத்து சேர்த்தால் என்பது என்னுடைய பொறுப்பு என்று ஒரு மூன்று ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். இதனை சிறப்பாக செய்ய எனக்கு ஒரு போர் படை தேவை. பத்து பேர் இருக்கிறார்கள் மீதி வாருங்கள்.

எழில் மொழியில் உள்ள “installer” திரட்டியில் இவை இடம் பெறவேண்டும் என்று எனக்கு தற்சமய நிபந்தனை:

  1. Platform Support: இயங்கு தளங்களில் வேலை செய்ய வேண்டும்:
    1. Windows 64, 32 bit
    2. Linux 64
  2. திரட்டியில் வேண்டியவை : Installer package
    1. எழில் மொழி திருத்தி ; இதனை ‘ezhuthi’ (எழுதி) என்று pygtk-இல் இங்கு இங்கு வடிவமைத்து வருகிறேன்.
    2. எழில் மொழி ezhil module python library
    3. தமிழில் நிரல் எழுது புத்தகம்
    4. தமிழில் நிரல் எழுது புத்தகம் பயிற்சி நிரல்கள்
    5. மேல் நிலை எழில் எ.கா. உதாரணங்கள்
    6. பாடம், ஆசிரியர்களுக்கு உண்டான காணொளி, கேள்வி தாள், வினா-விடை பாட திட்டம்.
  3. பரிசோதனைகள்
    1.  மொத்தமாக நிறுவுதல் பரிசோதனை (அணைத்து தளங்களிலும்)
    2. நிரல் எழுதுவது
    3. கோப்புகளை திறப்பது, இயக்குவது, சேமிப்பது
    4. தனியன்க்கி பரிசோதனைகள் (automatic tests)
    5. பயனர் நடப்பு பரிசோதனை (interactive tests)
  4. வெளியீடு
    1. md5 checksum, zip/exe/tgz package generation and upload to networks
    2. release notes, credits, contribution notes, credits to open-source software

ஒரு தவம், வரம் மறக்கப்படாது – முயற்சி திருவினையாக்கும். கை கூடுவோம், வாருங்கள்.