தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்

தமிழ் செயற்கையறிவு மற்றும் எந்திர வழி உரை பகுப்பாய்வு போன்ற செயல்பாடுகளின் திறன் தினமும் வளர்ந்து கொண்டே போகின்ற சமயத்தில் (செயற்கையறிவு என்ற பேரலையின் முதுகில் பயணிக்கின்றது என்றபடியாக) இவற்றினால் கடக்கவேண்டிய சில புதிர்கள் என்ன (என்பார்வையில்) என்று இந்த பதிவில் அலசலாம்.

  1. இருபால் சமநிலைப்பாடுத்தல் (gender balanced text)
    • அரசாங்கம், வணிக கார்ப்ரேட் நிறுவனங்கள் தினசரி புழக்கத்தில் பல செய்திகள் விளம்பரப்படுத்தலுக்கும், உள்நிறுவன செயல்பாட்டிற்கும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய செய்திகளில் சில் கேள்விகள் எழுகின்றன:
      • இந்த செய்திகள் முழுவதும் இருபாலினருக்கும் சரிசமமாக பாரபட்சமின்றி எழுதப்பட்டுள்ளதா?
      • இப்படி இல்லாவிட்டால் செயற்கையாக உரைதிருத்தம் செய்து இருபால் சம நிலைப்படுத்தல் செய்யலாம ?
    • உதாரணம்: “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் ஒப்புதல் பெற வேண்டும்..” என்ற படி ஒரு உரை இருந்தால் அது சமனிலைப்படுத்தப்பட்டபின்  “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் (அல்லது அவள் கணவனிடம், [துனைவன்/வியிடம்]) ஒப்புதல் பெறவேண்டும்” என்று வரவேண்டும்.
    • இத்தகைய ஒரு செயற்கையறிவு அல்லது தானியங்கியிடம் திருக்குறள் மற்றும் சம்காலத்தில் உருவாகாத பழங்கால உரைகளைக்கொடுத்தால் என்ன ஆகும் ?

மேலும் சில திறன்களை தமிழ் இயல்மொழிபகுப்பாய்வு பெரும் என்றும் நம்பலாம்; அடுத்தகட்ட கேள்விகள் / புதிர்கள் அடுத்த பதிவில்.

நன்றி

-முத்து

 

செயற்கையறிவு – அறம்

Montreal-Declaration-for-AI

எதர்க்காக செயற்கையறிவு எந்திரங்கள் ? நாம் செய்யும் தற்சமையம் அபாயகரமான தொழில்களிலும், நிபுனர்கள் குறைவாக உள்ள தொழிகளிலும் அதன்கண் விலைவாசிகளை குறைக்கும் வண்ணம் பலருக்கும் அத்தகைய சேவைகளை அளிப்பதிலும், தினசரி வாழ்வில் உள்ள சிறு சிறு விடயங்களை மேம்படுத்தவும் இவைகள் உதவுவது நாம் குறிக்கோள்களானாலும், இவை மற்றும்தானா செயற்கையறிவின் இலக்குகள்/பயன்கள்?

இல்லை. தீய பயன்களுக்கும் செயற்கையறிவு சிலரால் பயன்படுத்தலாம்உதாரணம்:

  1. Black Mirror என்ற தொலைகாட்சித்தொடரில் “Metal Head” என்ற கதையில் இரத்த வெறிபிடித்த செயற்கை ஓனாய்கள் பற்றியும்,
  2. Silicon Valley HBO தொடரில் “Eklow” என்ற கதையில் “Fiona” என்ற எந்திர பெண் பாலியல் முறைகேடிக்கு உட்படுத்தப்படுவதும்,
  3. தமிழில் எந்திரன்-1 இல் காதல் மோகம் கொண்ட (சிவப்பு சில்லு புரோகிராமிங் கொண்ட) “சிட்டி

பற்றியும் படித்தால் நாளைய ரோபோக்கள் எந்தவித வேலைகளில் ஈடுபடலாம் என்றும் அவற்றில் சில மனித அறம் மீரியவை என்றும் புலப்படுகின்றது.

ரோபோக்களின் திறன்களை செயற்கையறிவின் அறம் கொண்டு நிர்ணயிக்கும் தருணத்தில் இன்று நாம்இருக்கின்றோம். இந்த நிலை வெகு ஆண்டுகள் நீடிக்கும் என்பது சந்தேகத்திற்குறியதாக இருக்கின்றது. முதன் முதலின் இவற்றினை பற்றி பிறபலமாக அலசல் செய்தும் ரோபோக்களில் மீர கூடாத/முடியாத மூன்று கோட்பாடுகள் அளித்தவர் அசிமோவ்.

மேலும், இந்த சூழலில் கனடிய மொண்ரியால் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கின் வழிவந்த ஒரு செயற்கையறிவு நடுவன் மற்றும் மூல கட்டமைப்பு கோட்பாடு உலகத்தரம் வாயந்ததாகவும், பொதுவான குடியரசு, ஜனநாயக, சமத்துவ, மனித உரிமை, கோட்பாடுகளின் மீதும் தழுவிய அறக்கோட்பாடுகளென காண்கின்றேன். இதன் முழு உரை இங்கே: https://www.montrealdeclaration-responsibleai.com/the-declaration – இந்த ஆவணத்தை சிறந்த வழக்கறிஞர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் சேர்ந்து தமிழிலும் ஒரு நாள் மொழிபெயர்ப்பார்கள் என்று எண்ணலாம்.

மேலும் ஐக்கிய அமெரிக்க அரசும் இதனைப்போல் ஒரு பொது நல செயற்கையறிவின் பயன்பாட்டினை அமெரிக்க நாட்டின் நலத்திற்காகவும், உலக மக்களின் நலன், முன்னேற்றத்திற்காகவும் இங்கு அளித்திருக்கின்றது. https://www.bloomberg.com/opinion/articles/2020-01-07/ai-that-reflects-american-values

எனது பொறியாளர் நம்பிக்கை என்னமோ இயந்திரங்களை நாம் பிரம்மனைப்போல் படைத்தாலும் அவற்றின் மரபணுவில் நமது தலை சிறந்த மனிதவியல் கோட்பாடுகளை மட்டுமே சேர்க்கவேண்டும்.

-முத்து.

$upporting Tamil Chair in Toronto UTSC

Toronto, Canada is one of the largest cities in North America. Specifically, the Tamil population of Canada has a distinctive presence and shapes the culture and society of this diverse, vibrant city. After the successful completion of Harvard Tamil Chair, the Tamil Chair, Inc. organization has initiated a effort to incorporate a Tamil Chair at University of Toronto, Scarborough (UTSC).

UTSC Tamil Chair

Learn more on project and contribution modalities at following links,

  1. Full blog post at Solvanam blog,
  2. UTSC Toronto Tamil Chair

Blog readers are requested to contribute to support this cause to further understanding of Tamil language, Tamil literacy and archival/research into people, culture and milieu.

-MA

 

 

விரிகூடா தமிழ் பொங்கல் விழா 2019 – மதிப்புரை

விரிகுடா பகுதி தமிழ்மண்றம் பொங்கல் விழா – Tamil Mandram Pongal Festival event this weekend. யார் வாரங்க தெரியுமா ? திரு. உதயசந்திரன் IAS அவர் சிரப்புரை ஆற்றினார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறந்த சந்தைகள் இருந்தன.

விழாவிற்கு BATM – விரிகூடா தமிழ் மன்றம் இந்த விளம்பரத்தை தயாரித்தது:

குறிப்பாக அவரது உரையில் :

  • தமிழ் இணைய கல்விகழகத்தில் ஆன் பணிகள்,
  • தமிழ் மொழி, தமிழ்நாடு – கலிபோனியா இரண்டிலும் உள்ள சரிசமமான அரசியல் முன்னோக்கிய பார்வைகள், போன்றவற்றையும் பற்றி போசினார்
  • அவரது தமிழ் பள்ளி புத்தகத்துரையின் பணிகள் பற்றியும் தமிழ் நாடு அரசு பள்ளி பாட நூல் கழகத்தில் புதிய புத்தகங்களை உருவாக்கும் பணி, அதன் வெற்றிகள், நீட் தேர்வு பற்றியும் பேசினார்
  • தற்சமயம் அவரது தொல்லியல் துரை பணிகள் பற்றியும், கீழடி பற்றியும் விரிவாக பேசினார்.
  • முடிவில் சில கேள்விகளூக்கும் நேரம் இருந்தது
  • அவரது முழு உரை இங்கு கேட்கலாம்.

‘காலம் மாரிப் போச்சு, கண்ணீர் மாரிப் போச்சு’

பாலியல் தாக்குதல், வால்லுரவு, அத்துமீரல் பற்றி மார்சு 2018-இல் பாடகி சின்மயி வெளியிட்ட கானொளி. #MeTooIndia என்பாது பாரதி காண்ட பெண்ணியத்தை முதன்மையாக்குமோ ?

நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் பாடகி சின்மயி திடீர் என வெளியிட்ட வீடியோ! Chinmayi Sripada