நீங்களும் ஆக்கலாம் – சரியான ஜோடி!

சரியான ஜோடி!
உயிரெழுத்துக்கள் ஜோடி சேர்க்கும் விளையாட்டு.

1 ஏன், என்ன, எப்படி ?

எழுத்து விளையாட்டு – ஜோடி சேர்த்தல் – இரண்டு காலங்களில் சீட்டில் எழுதிய பெயர் மறைந்தபடி (மல்லாக்க) அடுக்கிய சீட்டுகளை ஜோடி சேர்த்தல் என்பது “Memory Match” என்று எளிதாக பலரும் (வயதில் மூத்தவரில் இருந்து குழந்தைகள் வரை)  விளையாட உதவும். மேலாக இந்த விளையாட்டில் எவ்வித படங்களையும் சராசரியாக பயன்படுத்தினாலும், நாம் இங்கு தமிழ் உயிரெழுத்துக்களை புகுத்துப்பார்க்கலாம் என்று தோன்றியது. தோடர்ந்து படியுங்கள் – எப்படி இந்த விளை

2 தேவையான பொருட்கள்

  1. அச்சிட ஒரு பிரிண்டர்🖨️
  2. 📃A4 அல்லது US Letter அளவான தாள்
  3. ✂️கத்திரி (நீங்கள் சிறுவரானால் ஒரு பெறியவரிடம் உதவி கேளுங்கள்)
  4. கோந்து | செல்லோடேப்பு | இ….
  5. அட்டை

3 செய்முறை

1. நீங்கள் A4 தாளில் இந்த விளையாட்டை உருவாக்கவேண்டுமெனில் இதனை பயன்படுத்தலாம் (கிளிக் செய்யுங்கள்) கீழ் உள்ள படத்தை அச்சிடவும்:

A4 அளவிலான உயிரெழுத்து தாள்
A4 அளவு

நீங்கள் US Letter அளவில் செய்தால், கீழ் உள்ள படத்தை அச்சிடவும்.

US Letter அளவு உயிரெழுத்துக்கள் விளையாட்டு
இந்த US Letter அளவு உள்ள படத்தை அச்சிடவும்.

இந்த இரண்டு படங்களும் Python, PIL, Open-Tamil, அச்சு தமிழ் OCR தரவு  மற்றும் இணைமதி எழுத்துருவில் வழி உருவாக்கப்பட்டது.

2. படி ஒன்றில் உள்ள படத்தை A4 அல்லது US Letter அளவில் உள்ள தாளில் அச்சிட்ட பிறகு அதனை அட்டையில் ஒட்டவும்.

பிக்1
அட்டையில் அச்சிட்ட தாளை ஒட்டியபின். (நான் முதலில் செய்த பொழுது வேண்டாத வேலையாக அட்டையை 24 துண்டாகவும், மறுபடியும் தாளை 24 துண்டாகவும் வீன் வேலை பார்த்தேன் – நீங்கள் அப்படி செய்ய வேண்டாம்!) 😅

3. அட்டையில் ஒட்டியபின் கோடுகள் ஓடியபடி கத்திரியுங்கள். அட்டையின் தன்மையை பொருத்து சற்று பலமாக செயல்படுத்தலாம்; கவனாமக செயல்படுங்கள் ✂️. சிறுவரி, கொழந்தங்க கிட்ட இதனை கொடுக்கவேண்டாம்.

4. அடுத்து நீங்கள் விளையாடலாம்! விதிகள் இப்படி

4. விதிகள்

  1. ஒருவராகவும் அல்லது இருவராகவும் விளையாடலாம் – முறை மாற்றி விளையாட்டு;
  2. தமது முறையின் போது ஒருத்தர் இரண்டு சீட்டுகளை மல்லாக்க இருந்து திருப்பி எடுக்கலாம்; இந்த சீட்டுகளில் ஒரே படம் – அதாவது எழுத்து இருந்தால் – அதனை அவரே தன்னகப்படுத்தி மறுமுறை விளையாடலாம் -சீட்டு ஜோடி சேராவிட்டால் இருந்த இடத்தை மட்டும் முடிந்த அளவு நினைவில் கொண்டு அதே இடத்தில் வைப்பார்.
  3. இப்படி இல்லாதபட்சத்தில் முறை மாறி மற்றவர் வெளையாடலாம். அவரும் அதே படி-2-இல் உள்ளவிதிகளின் படி.
  4. இப்படி முறை-மாற்றி விளையாடும் பொழுது, கடைசி சீட்டு ஜோடி சேர்ந்தபின் இருவரில் யார் அதிகமாக ஜோடிகள் சேர்த்தாரே அவர், அவர்களது அணி வெற்றிபெற்றதாகும்.
உயிரெழுத்து ஜோடி சேர்க்கும் ஆட்டம் முடிவில்
இரண்டாம் ஆட்டம் முடிந்த பின் சீட்டுகள்; மனைவி இடது பக்கம் – நான் வலது பக்கம். யார் வெற்றி என்பது கேட்கவே வேண்டாம்!

இந்த விளையாட்டு தான் உயிரெழுத்து நினைவகம். கொரோனாவின் ஊரடங்கு காலத்தில் இதை நீங்கள் வீட்டில் விளையாடலாம். எதுவும் சிறப்பாக திருத்தம் செய்யலாம் என்றால் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.

நனறி.

-முத்து

 

 

கொங்கு வழக்கு சொல்தேடல்

கொங்கு நாட்டு வட்டார வழக்கு சற்று இசைவானதும் கூட; மலை மலைசார் மக்கள், மலைச்சாரல் நிலம், மற்றும் பல தரப்பு மக்கள் காடு-மேடு-கலை என்றும் பலவகையில் வசீகரிக்கும் ஒரு குறிஞ்சி நில மண் வழி பிறந்த சொற்கள் பல படைப்பாளிகளின் வழி இன்றும் மேலோங்கி இந்த நிலத்து வழக்கு முன்நிற்கின்றது.

கிழே உள்ள சொல்தேடல்களில் உள்ள 10-சொற்களை கொடுக்கப்பட்ட உசாத்துனைகளிலிருந்து உங்களால் கண்டறியமுடியுமா? முயலுங்கள். தயாரித்தது: http://tamilpesu.us/xword/

  • உணவு அல்லது கட்டுச்சோற்றை கொண்டி செல்லும் கலன் (2)
  • கீழே இருப்பதை குனித்து கொங்கு நாட்டவர் எடுப்பார்கள் (4)
  • தனிமையில் நடந்து வருபவர் நடைபாவனை (7)
  •  வைக்கோல், பருத்தி, ஆகியவை அறுவடையின்பின் காய்ந்த வடிவில் விலங்குகளுக்கு உணவாகும் (2)
  • ஏழு அல்லது எட்டு உருப்பிடிகள் (4)
  • பனையில் வழி வடிகட்டிய சர்க்கரை (6)
  • மதிய உணவுக்குப் பின் பொழுதுசாயும் வரை அளிக்கப்படும் சிறிய உணவுகள் (5)
  •  காய்ச்சிய திடமான மதுபானம்(4)
  • பனை மற்றும் தென்னையில் இருந்து சுண்ணாம்பிட்டு இறக்கப்படும் மதுபானம்(2)
  • “நான் பிடித்த _ _ _ -க்கு மூன்றுகாலு” (3)

சொல்தேடல்

கொங்கு நாடு சொல்தேடல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விடை

கொங்கு நாடு விடைகள்

  1. போசி
  2. குமிஞ்சு
  3. தன்குண்டியாக
  4. போர்
  5. ஏழெட்டு
  6. கருப்பட்டி
  7. பலகாரம்
  8. சாராயம்
  9. கள்
  10. மொசல்

 

நன்றி

-முத்து.

குட்டி story … ஒரு அலசல்

Screen Shot 2020-04-18 at 12.23.13 PM

சமிபத்திய வெளியாகவுள்ள, லோக்கோஷ் கனகராசு இயக்கத்தில், “Master” திரைப்பட பாடல் ஆல்பத்தில் ஒரு வித்தியாசமான, மனதைக்கவரக்கூடிய தமிழ்/தங்கிலிசு பாடல், “குட்டி story,” இடம் பெற்றது. இதை பிரபல திரைப்பட நடிகர் விஜ்ய் பாடி இசைவாக அமைந்தது. இதை அனுராஜா காமராஜ் பாடல்வரிகள் எழுதி, அநிருத்ரவிசந்தர் இசைஅமைத்துள்ளார்.

Screen Shot 2020-04-18 at 12.47.56 PM

இந்த பாடல் வரிகளை அலசிப்பார்த்தால் என்ன தெறிகின்றது நமக்கு ? இதில் முதலில் நிறைய ஆங்கில சொற்கள் படத்தின் ஏதோ ஒரு சூழலில் இயற்கையாக வரும் தருணத்தை குறிக்க இப்படி பாடல் எழுதியிருக்காங்க என்று கொள்ளலாம். காப்புரிமம் காரணமாக பாடல்வரிகளை இங்கு முழுதாக இடமுடியாவிட்டாலும், நாம் ஓப்பன் தமிழ் கொண்டு இந்த பாடல்களை அலசினால், சுமார் இருபது சதம் சொற்கள் மட்டுமே தமிழ் வரிகளை கொண்டதாக அமைந்திருக்கிறது.

எதுகை மோனையில் {“happy”,”crappy”} – “மாப்பி” என்று தமிழ்-ஆங்கிலம் தங்கிலிஷில் பூந்து விளையாடுகிறார் பாடலாசிரியர்.

பாடல் சற்று கட்டமைப்பில் (rhyme-scheme) எளிமையாக இருந்தாலும்கூட பாட்டில் ஏதோ ஒரு வாழ்க்கையில் சமரசத்தையும், ஒரு நம்பிக்கையூட்டும் நோக்கில் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. போராட்ட மனப்பாங்கில் இருந்து வெளிவந்தும், மன அவதிகளில் இருந்தும் ஒரு ஓய்வெடுக்க பாடகர் வலியுருத்துகிறார்.

முழு நிரல் இங்கு பார்க்கலாம்:

#!/bin/env python3
from codecs import open
from tamil import utf8
import re
with open('kuttistory.txt','r','utf-8') as fp:
data = fp.readlines()
class Stats:
__fields__ = ('total_words','tamil_words')
stats = Stats()
stats.total_words=0.0
stats.tamil_words=0.0
for line in data:
all_words = re.split('\s+',line.strip())
ta_words = list(utf8.get_tamil_words(utf8.get_letters(line)))
print(all_words,len(ta_words))
stats.tamil_words += len( ta_words )
stats.total_words += len(all_words)
#tamil fraction
taf = float(stats.tamil_words)/stats.total_words
print('English = {0}%, Tamil = {1}%'.format(100.0*(1-taf),100.0*(taf)))

தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (4) – எண்கள்

1. மொழியின் போக்கு

சில தலைப்புகளில் தமிழ் உரை சிக்கல்கள் அதனைக் கையாளும் ஒரு யுகிப்புகளையும் ஏற்கணவே கண்டோம். தமிழ் அறிவாளிகளிலும், எழுத்தாளர்களிலும் ஒரு தனியிடம் வகிக்கும் ஐயா திரு. நாஞ்சில் நாடன் (அவர் முதுகலை புள்ளியியளாளர் என்பதால் எண்களில்/பொறியாளர்களுக்கு நெருக்கமானவராகவும் சற்று அவரை காணத்தோன்றுகிறது) சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் புழக்கப்படும் சொல்வளம் வெரும் முன்னூரு சொற்கள் மட்டும் தான் என்று திடுக்கிடும்படி சொன்னார். இதனை, ஒரு கம்பராமாயண படித்து உரை எழுதிய அறிஞர்/வித்தகரிடம் இருந்து வருவது மிக முக்கியமான ஒரு மொழியின் போக்கைப்பற்றிய விமர்சனம்.

அதாவது தற்காலிக தமிழில் சுமார் மூன்று இலட்சம் சொற்கள் இருக்கு என்றால் அதில் 1/10 சதவிகிதம், அதாவது 0.1% சொற்களை மட்டும் தான் நாம் புழக்கப்படுத்துகிறோம் அவ்வை எப்படி போர்கிடங்கில் உள்ள ஆயுதங்களை பற்றி விமர்சித்தாள் என்றது போல் நாஞ்சில் அவரது கூற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். தமிழில் யாரும் ஒரு சொல்லாடல் கணக்கொடுப்பு அல்லது இயல்மொழி பகுப்பாய்வு கணக்கெடுப்பு மென்பொருளை உருவாக்கினால் அதற்கு நாஞ்சில் என்று பெயருடிங்கள்.

இந்த வாரம் கொரோனாவினால் உலகெங்கும் ஊரடங்கில் இருக்கின்றோம். சில தமிழ் கணினியாளர்கள் நங்கள் இணையம் வழி சந்திப்பு நடத்தினோம் அதன் வீடியோ இங்கு பதிவில் காணலாம். இந்த சந்திப்பின் படம் இந்த கட்டுரையின் தலைப்பில் காணலாம்.

2. இடைவெளி எண்கள்

இந்த வாரம் எனக்குப் புலப்படும் சிக்கல் இதோ: இடைவெளி எண்கள் – அதாவது ஒரு மதிப்பினை தோராயமாக நாம் குறிக்கும் போது – “எவ்வளது நாள் ஆகும் இந்த பொருள் வீடுசேர?” “சுமார் பத்துப்பதினைந்து நாட்களில் வரும்” – என்றபடி நாள்தோரும் நாம் கேட்கின்றோம். இதனை கணினியில் எப்படி இயல்மொழி உணரலாம் ?

  1. நூறு-இருனூறு கொடுத்து அனுப்புங்க” (வணிகம்)
  2. பத்து-ஐஞ்சு ஆகலாம் – ஆனால் ஒன்னும் தேராது.” (வணிகம்)

மேலும், இவற்றில் எப்போதும் கீழ்வரிசையில் மட்டுமா வரும் ? (வெக்கை நாவலில் பூமணி, பத்து-ஐஞ்சு  என்ற சொலவம் பயன்படுத்துகிறார்). இவை இரண்டிற்கும் ஒரே மாதிரியான அல்கோரிதம்

3. எண்கள்

இதில் திறித்துப் பார்த்தால் மற்றுமொரு கேள்வி இருக்கின்றது: தமிழில் சில எண்களை அதிகம் பேசப்படுகின்றன:

  1. ஆயிரத்தெட்டு காரணம் சொல்லாம் – ஆனால் ஒப்புக்கொள்ளமுடியாது” (பொதுவெளி)
  2. நூற்றிஎட்டு தேங்காய் உடைக்கனும்,” “வாரணம் ஆயிரம்” … (ஆன்மீக வெளிப்பேச்சு)

இடம் சூட்டும் எண்கள் (ordinals) என்பவையும் உள்ளன – அதாவது,

  1.  “இந்தக்குதிரை டெர்பி போட்டியில் முதல் இடத்தை பிட்காமல் மூன்றாம் இடத்தில் வந்தது; அனைத்து சூதாட்டக்காரர்களும் தங்களது முதலீட்டை முழுசாக இழந்தனர்.”
  2. “நீ முதலாவதா தேர்தலின் வராட்டியும் பத்தாவதிற்குள் வந்து வாக்குப்பிளவிக்கனும்; இல்லாவிட்டால் கட்சியில் இருந்து நீக்கம் செய்வோம்.”

4. சொல்வழி கணிதம்

உதாரணமாக எங்கு நாம் இந்த எண்களை உரைவடிவில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒலிவழி உணரியின் வழியாக கணிதம் செய்தல் என்றபடி இது தேவைப்படுகிறது. இதனை automatic speech recognition (ASR) என்றும் சொல்லலாம்.

உராணம், எப்படிஇந்த ஒலிவழி சொல்லப்பட்ட கூற்றை கணித்து ஒலிவழி விடைஅளிப்பது?

ஓர் ஆயிரம் கழித்தல் ஐந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)

முதலில் தமிழ் எண்களை கணினியில் உணரவேண்டும் – இதனை ஓப்பன்-தமிழ் வழி செய்யலாம். பின் இரும-நிலை மரம் (binary tree parsing and post-order traversal) அல்லது பைத்தான் மொழி eval என்ற கட்டமைப்பின் வழியாக எளிதில் கணக்கிடலாம். முழு நிரல்

# This Python file uses the following encoding: utf-8
#!/bin/env python3
# (C) 2020, எழில் மொழி அறக்கட்டளை
# இந்த நிரல் ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பில் சேர்ந்ததாகும்.
# உரைவழி தமிழ் எண்களினை கொண்ட கணிதவியல்
# உள்ளீடை கணக்கிடும் ஒரு கருவி.
import operator
import re
import tamil
def அச்சிடு(_): print(_)
def கணி(_): return eval(_)
செயல்சார்புகள் = {"கூட்டல்":('+',operator.add),"கழித்தல்":('-',operator.sub),
"பெருக்கல்":('*',operator.mul), "வகுத்தல்":('/',operator.truediv)}
அதிக_பட்சம் = 1001
இலகுவான_எண்கள் = {}
for எண் in range(அதிக_பட்சம்):
இலகுவான_எண்கள்[ tamil.numeral.num2tamilstr(எண்) ] = எண்
வழுநீகால்_இயக்கம் = True
def கணக்கிடு( _தொடர் ):
தமிழ்_உரை_தொடர் = re.sub('\s+',' ',_தொடர்)
# செயல்சார்புகளை குறியீடுகளாக மாற்றவும்
for பெயர்,எண் in செயல்சார்புகள்.items():
தமிழ்_உரை_தொடர் = தமிழ்_உரை_தொடர்.replace(பெயர்,எண்[0])
for பெயர்,எண் in இலகுவான_எண்கள்.items():
தமிழ்_உரை_தொடர் = தமிழ்_உரை_தொடர்.replace(பெயர்,'%g'%எண்)
if வழுநீகால்_இயக்கம்:
அச்சிடு(தமிழ்_உரை_தொடர்)
விடை = கணி(தமிழ்_உரை_தொடர்)
அச்சிடு(tamil.numeral.num2tamilstr( விடை ) )
return விடை
if __name__ == "__main__":
assert 2 == கணக்கிடு("ஒன்று கூட்டல் ஒன்று")
assert 21 == கணக்கிடு("ஒன்று கூட்டல் இரண்டு பெருக்கல் பத்து")
assert 950 == கணக்கிடு("ஓர் ஆயிரம் கழித்தல் ஐந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)")
© 2020 GitHub, Inc.
Terms
Privacy
Security
Status
Help
view raw olini.py hosted with ❤ by GitHub

5. முடிவு

சமிபத்தில், ஊரடங்கின் உச்சியான சமயத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு சிந்த்தனை – அதனை நினைத்துப் பார்க்கவே வியப்பாய் இருந்த்தது -“{உங்கள் நாட்டின்/மாநில} அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை ஆதரிக்கிறதா?” என்ற கேள்வி. நான் பருகியிருந்த காப்பியை முழுங்கமுடியவில்லை – விடை என்னிடம் இல்லை. மொழி என்பது நாம் பயன்பாட்டில் – அரசு உத்தரவில் கிடையாது. சிந்தைவெளியில் வளர்ச்சியை மந்தைவெளியின் ஊக்கத்தில் பார்ப்பது தவறு என்றும், அரசின் பொருப்பு பதவியை தக்கவைத்துக்கொள்வது என்பதும்தான் தினசர் நிஜமாக உலகெங்கும் உள்ளது. தனி நபர் முயற்சியால் சில செயல்பாடுகளை எதிர்கொள்ளலாம் ஆனால் தமிழ் என்றும் சீன மொழிமாதிரி ஆகும் என்றேல்லாம் பகல்கணவுகள் காண எனக்கு உடன்படாது.