Artful Arisuvadi – Tamil Alphabet Nomograms

Some weeks ago I started playing with and made a bunch of alphabet nomogram style pictures with Easel JS. Its interesting to think of possibilities.

Canonical Tamil has 12 + 1 vowels [உயிர்], 18 consonants [மெய்] and 12×18 = 216 [உயிர்மெய்] conjugate letters. Together the can be arranged in a Table of named column [12 for vowels] and named rows [18 for consonants] and cells of row-column at the conjugate letters.

I posted several images on Twitter; first one based on 3 concentric circles arrangement of the letters.

Arisuvadi – (C) 2018 Muthu Annamalai

Another image based on sunflower-spiral:

Arisuvadi – (C) 2018 Muthu Annamalai

The other based on a logarithmic spiral: 

Arisuvadi – (C) 2018 Muthu Annamalai

Another image looks to illustrate vowels and consonants as an interactive widget where you select uyir and mei letters from the outer + inner circles to form the uyirmei conjugate letter in the center.

Arisuvadi – (c) 2018 Muthu Annamalai

வான்பசு – மொழியியல் மரப மரபணு

சென்ற வாரம் எங்களது வீட்டிற்கு மனைவியின் பக்கத்து சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வருகை. அண்ணன் மகன் சிறுவன் -தாய்ப்பாலுடன் தமிழையும் அறவே அருந்தியவன் போலும்.

Wild_turkey_eastern_us
வான்கோழி [Turkey]. படம் உரிமம்: விக்கிப்பீடியா

சிறுவன் அவனது அம்மாவுடன், விலங்குகளின் பணியாளர்களின் பெயர்களையும் ஒரு விளையாட்டாக தனக்கு தெரிந்த சொல்வளத்தினில் சொல்லிக்கொண்டு முறை மாற்றி மாற்றி விளையாடுவது அவன் பழக்கம்.

அவனது பெற்றோர் இதனை சிறிது நேரம் அவன் சலிப்பை நீக்கவும், அடம், பிடிவாதங்களில் இருந்து அவன் கவணத்தை திசை திருப்பவும் முயற்சி செய்வார்கள். ‘அடுத்த விலங்கு’ அல்லது ‘அடுத்த பணியாளர்’ போன்ற விளையாட்டுகளில் நாங்களும் பங்கேற்போம்.

ஒரு முறை, இப்படி விளையாடிக்கொண்டிருக்கையில், ஆட்டம் 15-20 விலங்குகளின் பெயர்களைத்தாண்டி போனது; அவனது சொல் வளத்தின் எல்லை என்றும் சொல்லாம். சிறுவனிடம், நான் ‘வான்கோழி’ என்று எனது பங்கிற்கு சொன்னேன். அவனும் எற்கனவே ‘நெருப்புக்கோழி’ என்றும் சொல்லியிருந்தான்.  தற்போது, அவன் ஆட்டம். என்ன சொல்லப்போகிறான்?

“வான்பசு,” என்று புன்சிரிப்புடன் வெற்றியை கைபிடித்தவன் போல சொன்னான். “தம்பி அப்படி ஒரு பசு கிடையாதே!”, என்று சொல்லி அவனை சமாதானப்படுத்துவது ஒரு காரியமானது.

ஆனால் என்ன ஒரு கவனிப்பு, மொழியியல் கூர்மை. ஆகா – வியந்தேன். அவனுக்கும் பகுதி, விகுதி, இதெல்லாம் தெரிந்திருக்குமோ? மொழியியல் வல்லுனர்களின் கணிப்பில், இருக்கலாம். நாலுவயசானாலும் என்ன, தமிழை பிரித்து மேயும் மூளை; தமிழ் தாய் வாழ்த்தும் பாடுவான் கிரிதிக்.

p.s: பிழைத்திருத்தங்களுக்கு நன்றி – திரு. ரவிராஜ் ஸ்புட்னிக்.