அசட்டுத்தனம்

குழந்தைகளை அது-இது என்று persona-non-grata வாக ஏன் தமிழர்கள் நடத்துகிறோம் ?

இந்த தகவல் எல்லாம் சும்மா வட்சப் பல்கலைல போட்டுவிடலாமே:

உயிர் எழுத்துக்கள்

இணைமதி எழுத்துருவில்; அச்சிட்டு விளையாடலாம். மனைவி, சாலா, கோரிக்கைக்கு ஒரு கலை திட்டம்/விளையாட்டு உருவாக்குவதற்கு இதனை செய்தோம்; வானவில் போன்ற நிரங்களில் (ROYGBIV) என்ற வரிசையில் நிரங்கள் உள்ளன.

வண்ணங்களும் எழுத்துக்களும் கண்டால் இதைப்போன்ற திட்டங்களிலும் செயலிகளையும் உருவாக்கவேண்டும் என்றும் ஒருவித ஏக்கம் தோன்றுகிறது. காண்பதெல்லாம் கண்களை குளிரவைக்கும் வட்டெழுத்துக்கள்.

கொங்கு வழக்கு சொல்தேடல்

கொங்கு நாட்டு வட்டார வழக்கு சற்று இசைவானதும் கூட; மலை மலைசார் மக்கள், மலைச்சாரல் நிலம், மற்றும் பல தரப்பு மக்கள் காடு-மேடு-கலை என்றும் பலவகையில் வசீகரிக்கும் ஒரு குறிஞ்சி நில மண் வழி பிறந்த சொற்கள் பல படைப்பாளிகளின் வழி இன்றும் மேலோங்கி இந்த நிலத்து வழக்கு முன்நிற்கின்றது.

கிழே உள்ள சொல்தேடல்களில் உள்ள 10-சொற்களை கொடுக்கப்பட்ட உசாத்துனைகளிலிருந்து உங்களால் கண்டறியமுடியுமா? முயலுங்கள். தயாரித்தது: http://tamilpesu.us/xword/

  • உணவு அல்லது கட்டுச்சோற்றை கொண்டி செல்லும் கலன் (2)
  • கீழே இருப்பதை குனித்து கொங்கு நாட்டவர் எடுப்பார்கள் (4)
  • தனிமையில் நடந்து வருபவர் நடைபாவனை (7)
  •  வைக்கோல், பருத்தி, ஆகியவை அறுவடையின்பின் காய்ந்த வடிவில் விலங்குகளுக்கு உணவாகும் (2)
  • ஏழு அல்லது எட்டு உருப்பிடிகள் (4)
  • பனையில் வழி வடிகட்டிய சர்க்கரை (6)
  • மதிய உணவுக்குப் பின் பொழுதுசாயும் வரை அளிக்கப்படும் சிறிய உணவுகள் (5)
  •  காய்ச்சிய திடமான மதுபானம்(4)
  • பனை மற்றும் தென்னையில் இருந்து சுண்ணாம்பிட்டு இறக்கப்படும் மதுபானம்(2)
  • “நான் பிடித்த _ _ _ -க்கு மூன்றுகாலு” (3)

சொல்தேடல்

கொங்கு நாடு சொல்தேடல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விடை

கொங்கு நாடு விடைகள்

  1. போசி
  2. குமிஞ்சு
  3. தன்குண்டியாக
  4. போர்
  5. ஏழெட்டு
  6. கருப்பட்டி
  7. பலகாரம்
  8. சாராயம்
  9. கள்
  10. மொசல்

 

நன்றி

-முத்து.

அமிக்டலா – நினைவுகளின் மணம்

இந்த வாசனைப்பொருட்கள் யாவை என்று கண்டடைய முடியுமா ? அமிக்டலா பற்றியும் சற்று படியுங்கள் நேரம் கிடைக்குமளவில்.

 

 

உதவிக்குறிப்புகள்:

  • special kind of Tamarind
  • not usual Dates you eat
  • another kind of Orange
  • பச்சையாக உண்ணும் மாங்காய்வகை
  • Fruit of Palm tree – not coconut
  • Jamun variety ?
  • தேங்காய்க்கும் முன்.
  • Chickoo fruit
  • மணம்வீசும் கிளங்கில் இருந்து வரும் வெண் மலர்
  • பாரிசு நகர் மாலையிலும் உள்ள மண் வாசனை

    அமிக்டலா - நினைவுகளின் மணம்
    ஆமிக்டலாவில் நினைவுகளின் மணம் உள்ளது என்று மூளை விஞ்ஞானிகள்/நரம்பு தத்துவியாளர்கள் சொல்வது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விடைகள்:

அமிக்டலா - விடைகள்

 

🦊 விலங்குகள் – குறுக்கெழுத்து

விலங்குகள் – குறுக்கெழுத்து – இந்த கீழ் உள்ள சட்டத்தில் என்ன என்ன விலங்குகளின் பெயர்கள் உள்ளன என்று உங்களால் கண்டறிய முடியுமா ? உபயம் : தமிழ்பேசு  வலை.

இதனை இலவசமாக நீங்க அச்சிட்டும், மற்ற ஊடகங்களிலும் பயன்படுத்தலாம்.

🦃 🐔 🐓 🐣 🐤 🐥 🐦 🐧 🕊️ 🦅 🦆 🦉🐵 🐒 🦍 🐶 🐕 🐩 🐺 🦊 🐱 🐈 🦁 🐯 🐅 🐆 🐴 🐎 🦄 🦌 🐮 🐂 🐃 🐄 🐷 🐖 🐗 🐽 🐏 🐑 🐐 🐪 🐫 🐘 🦏 🐭 🐁 🐀 🐹 🐰 🐇 🐿️ 🦇 🐻 🐨 🐼 🐾 🦓 🦒 🦔

கழுகுகள் – eagles
யானை – elephant
யானைகள் – elephants
ஒட்டகச்சிவிங்கி – giraffe
ஒட்டகச்சிவிங்கிகள் – giraffes
ஆடு – goat
ஆடுகள் – goats
குதிரை – horse
குதிரரைகள் – horses
சிங்கம் – lion
சிங்கங்கள் – lions
குரங்கு – monkey
குரங்குகள் – monkeys
சுண்டெலி – mouse
சுண்டெலிகள் – mice
முயல் – rabbit
முயல்கள் – rabbits
பாம்பு – snake
பாம்புகள் – snakes
புலி – tiger
புலிகள் – tigers
ஓநாய் – wolf
ஓநாய்கள் – wolves

விலங்குகள்-tamil-crossword

விடைகளுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம் – ஆனால் தேவைப்படாது என்றும் தோன்றுகிறது.

-முத்து