மென்பொருளுடன் உறவாட

2004-05 வாக்கில் திருச்சியில் படித்த காலம்; 2004-இல் எங்கள் திருச்சி GLUG என்பதை வழிநடத்திவந்த திரு. பி. விஜயகுமார் அவர்கள் பட்டம் பெற்று வேறு பணிகளுக்கு சென்றார். எங்களது கூட்டாளிகள் ஒரு நிரலாக்கம் போட்டியில் சேரலாம் என்று எண்ணி, பொறியியல் கல்லூரி படிப்பில் நெருக்கமான ஒரு மென்பொருளை தேர்வு செய்தோம்; அதாவது கனு-ஆக்டேவ் GNU Octave – இது MATLAB என்ற மென்பொருளுக்கு தோராயமான மாற்றாக விளங்கும் என்று எண்ணினோம். திட்டம் தொடங்க, அச்சமயத்தில் Octave-இக்கு ஒரு நல்ல திரை இடைமுகம் கிடையாத காலம் – அதில் வந்து GTK என்ற GUI Toolkitஐ இணைக்கலாம் என்பது திட்டம்; எங்கள் குழுவில் யாருமே கணினி பொறியியலில் வல்லுநர் கிடையாது – ஏதோ தட்டுத்தடுமாரி எப்படியோ படிப்படியாக மென்பொருளை “language bindings” என்ற தொழில் நுட்பம் கொண்டு செயல்படுத்திவிட்டோம்.

Octave-GTK, Octave-libglade bindings

அன்று திருச்சியில் மிகப் பெரிய பொறியியல் கல்லூரி என்றாலும், சிற்றுந்தில் ஏரி நெட்கபேயில் அருகிலுள்ள திருவெரும்பூரில் சென்று மட்டும் தான் SSH பொர்ட் 22 firewall தாண்டிய அனுமதி பெற்று இந்த திறமூல மென்பொருளை இணையத்தில், sourceforge-இல் தரவேற்றம் செய்ய வாய்ப்பு இருந்தது. இளங்கலை முடிந்த வாக்கில் இந்த போட்டியில் இரண்டாவது இடம் கொடுத்து அதில் கணிசமான (ஒன்றறை இலட்சம்) பரிசு தொகை குழுவிற்கு கொடுத்தார்கள்! நான் அன்றே அடுத்த விமானத்தில் அமெரிக்கா கிளம்பி ஒடியாந்துட்டேன். இன்றும் இதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஓப்பன் தமிழ் என்று தொடங்கும் சமயம், அப்படி ஒரு சேவை இல்லையே என்று என்னால் நம்ப முடியவில்லை. சென்ற பத்தாண்டில் open-tamil, தமிழ்பேசு வலைதளம் என்றும் செயல்படுவதில் ஒரு மகிழ்ச்சி; இந்த தளத்தை Python3 என்றும் Django 3 என்றும் மேம்பாடு செய்தமையால் பல நவீன செயலிகள் – தமிழ் சந்திப்பிழைதிருத்தி, தமிழ் இணையவாணி சொல்திருத்தி, GNU Aspell சொல்திருத்தி போன்றவற்றை செயல்படுத்த முடிந்தது. கணியம் சயத் அபூதாகிர், சீனீ அவர்கள் தொடக்கிவைத்த இந்த வலைதளம் சிந்தனை மற்றும் கட்டமைப்பு, மற்ற மென்பொருள்களையும் பொது பயன்பாட்டிற்கு வழங்க உதவிகர்மாக இருக்கிறது. இந்த சமீபத்திய பதிப்பை வழங்க சூரேன் அவர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

இதனை செயல்படுத்தியவகையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கதையாக இருக்கிறது; ஒரே{Tamil Sandhi Checker [சீனீ, நித்யா]} x {Spell Checker(s)} அதனை இரண்டு சொல்திருத்திகளுடன் (வாணி மேசைபதிப்பு/பைத்தான் வழி [ நீச்சல்காரன், சீனீ கணியம் குழு]) மற்றும் ஏஸ்பெல் [GNU ASpell, இளஞ்செழியன் தமிழா/மலேசியா குழுவினர்] இவற்றுடன் remix செய்து ஒரு புதிய சேவயை. http://tamilpesu.us அளிக்கமுடிகிறது என்பதுதான் திறமூல சூழலின் ஒரு பெரும்பலமாக இருக்கிறது.

எழில்-open-tamil contributors meetup (2018)

திறமூல மென்பொருள்களின் தொடக்கம் ஏதோ ஒரு உந்துதலினால் ஒரு இச்சையினால் தொடங்குகிறது. திறமூல மென்பொருட்களை அடிப்படை கட்டமைப்புகளில் பலரும் பொதுவாக அனுகி பயன்படுத்தும் வகைசெய்தால் மட்டும் “இனி மெல்ல தமிழ் வாழும், தமிழர் இணையத்தில் தழைக்கலாம், தமிழர்தொழில் நுட்பத்தின் வாயிலாக வல்லமை பெறலாம்” என்ற நிலை உறுதியாக வர வாய்ப்பு உண்டு. இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், தனியார்களும் தமிழக அரசைவிட, மற்ற நாடு அரசுகளைவிட, கண்டிப்பாக இந்திய அரசைவிட, ஊக்கம் அளிக்கக் கூடும். ஆனால் நாம் தொடர்ந்து தமிழ் கணினி /கலை ஆக்கங்களை ஊக்குவிவ்க வேண்டும். பண/அதிகார பலம் உள்ளவர்களிடத்தும் இதனை முறையிடுதலும் வேண்டும்.

மொழி வளர்க்க பாரதி சொன்னதுபோலும், “அச்சமில்லை …,”, அதை செயல்படுத்தல் திறமூல மென்பொருளில் எவருடைய தயவுதாட்சண்யையின்றி செயல்படும் நல்ல நிலை உருவாக்கும் என்ற எண்ணம்/நம்பிக்கை இருக்கிறது. கிட்டத்திட்ட மொழியின் வளர்ச்சி மாதிரிதான் மொழியியல் மென்பொருளும் வளர்கிறது.

பொது வீட்டின் முற்றத்தில் வேரேடுக்கும் ஆலமரத்தை, ஊக்குவிப்போம்! ஊர் ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.

செயற்கையறிவு – அறம்

Montreal-Declaration-for-AI

எதர்க்காக செயற்கையறிவு எந்திரங்கள் ? நாம் செய்யும் தற்சமையம் அபாயகரமான தொழில்களிலும், நிபுனர்கள் குறைவாக உள்ள தொழிகளிலும் அதன்கண் விலைவாசிகளை குறைக்கும் வண்ணம் பலருக்கும் அத்தகைய சேவைகளை அளிப்பதிலும், தினசரி வாழ்வில் உள்ள சிறு சிறு விடயங்களை மேம்படுத்தவும் இவைகள் உதவுவது நாம் குறிக்கோள்களானாலும், இவை மற்றும்தானா செயற்கையறிவின் இலக்குகள்/பயன்கள்?

இல்லை. தீய பயன்களுக்கும் செயற்கையறிவு சிலரால் பயன்படுத்தலாம்உதாரணம்:

  1. Black Mirror என்ற தொலைகாட்சித்தொடரில் “Metal Head” என்ற கதையில் இரத்த வெறிபிடித்த செயற்கை ஓனாய்கள் பற்றியும்,
  2. Silicon Valley HBO தொடரில் “Eklow” என்ற கதையில் “Fiona” என்ற எந்திர பெண் பாலியல் முறைகேடிக்கு உட்படுத்தப்படுவதும்,
  3. தமிழில் எந்திரன்-1 இல் காதல் மோகம் கொண்ட (சிவப்பு சில்லு புரோகிராமிங் கொண்ட) “சிட்டி

பற்றியும் படித்தால் நாளைய ரோபோக்கள் எந்தவித வேலைகளில் ஈடுபடலாம் என்றும் அவற்றில் சில மனித அறம் மீரியவை என்றும் புலப்படுகின்றது.

ரோபோக்களின் திறன்களை செயற்கையறிவின் அறம் கொண்டு நிர்ணயிக்கும் தருணத்தில் இன்று நாம்இருக்கின்றோம். இந்த நிலை வெகு ஆண்டுகள் நீடிக்கும் என்பது சந்தேகத்திற்குறியதாக இருக்கின்றது. முதன் முதலின் இவற்றினை பற்றி பிறபலமாக அலசல் செய்தும் ரோபோக்களில் மீர கூடாத/முடியாத மூன்று கோட்பாடுகள் அளித்தவர் அசிமோவ்.

மேலும், இந்த சூழலில் கனடிய மொண்ரியால் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கின் வழிவந்த ஒரு செயற்கையறிவு நடுவன் மற்றும் மூல கட்டமைப்பு கோட்பாடு உலகத்தரம் வாயந்ததாகவும், பொதுவான குடியரசு, ஜனநாயக, சமத்துவ, மனித உரிமை, கோட்பாடுகளின் மீதும் தழுவிய அறக்கோட்பாடுகளென காண்கின்றேன். இதன் முழு உரை இங்கே: https://www.montrealdeclaration-responsibleai.com/the-declaration – இந்த ஆவணத்தை சிறந்த வழக்கறிஞர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் சேர்ந்து தமிழிலும் ஒரு நாள் மொழிபெயர்ப்பார்கள் என்று எண்ணலாம்.

மேலும் ஐக்கிய அமெரிக்க அரசும் இதனைப்போல் ஒரு பொது நல செயற்கையறிவின் பயன்பாட்டினை அமெரிக்க நாட்டின் நலத்திற்காகவும், உலக மக்களின் நலன், முன்னேற்றத்திற்காகவும் இங்கு அளித்திருக்கின்றது. https://www.bloomberg.com/opinion/articles/2020-01-07/ai-that-reflects-american-values

எனது பொறியாளர் நம்பிக்கை என்னமோ இயந்திரங்களை நாம் பிரம்மனைப்போல் படைத்தாலும் அவற்றின் மரபணுவில் நமது தலை சிறந்த மனிதவியல் கோட்பாடுகளை மட்டுமே சேர்க்கவேண்டும்.

-முத்து.