முகம் சுளிக்கும் நிரலாளரின் மூளைக்கு வேலை

படம்: முத்து கிட்டார் வாசிக்காமல் கருத்து சொல்கின்றான்.

உறங்குவதற்கும் முன் நிரல் எழுதினால் ஏன் தூக்கம் தூரம் செல்கின்றது ? நிரல் எழுதுவதும், வடிவமைப்பதும் இரு பரோட்டா கடையில், அல்லது ஓட்டலில் தோசை ஊற்றுவது போலன்று – மூளையை குழப்பி எடுக்கும், பின்னிப் பிணைந்து, எடுத்த பாதைகளும், எடுக்காத திசைகளையும் அவற்றின் தாக்கங்களையும் மனதில் மூளையில் படிப்படியாகக் கொண்டு நாம் அதனை செயல்படுத்தி நிரல் வடிவமைக்கின்ற்றோம். அரைத்த மாவை அரைக்க இங்கு வேலை இல்லை. ஒவ்வொரு வழு, பிழையும் ஒரு தனி கிரத்தில் இருந்து வந்தது போலவும் தோன்றும்.

விஸ்வணாதன் ஆனந்த் சதுரங்க ஆட்டத்தில் எப்படி மூளையை கசக்க்கி சிக்கலான ஆட்டத்தில் எதிராளியின் தாக்குதலில்இருந்து விடுவிக்க முயலும் சமயம் அவர்மூளையின் வேலை அளவில் உள்ள வேகம் சராசரி கணினி நிரலாளர்களின் வேகமாக அமையும். இப்படி சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை – கணினி நிரலாக்கத்தில் எதிராளி என்பது என்ன ?

Entropy என்று சொல்லக்க்கூடிய சரியான விடையின் பாதையில் உள்ள தவரான விடைகள் – இவற்றை சலிப்பில்லாமல் கடந்து வந்தால் சரியான விடை கிடைக்காது – அது, அந்த ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்கும் தீர்வுகள்/முடிவுகள் கணிமையின் திசையை சரியான (எளிதில் – path of least resistance – வழி கிடைக்காத வகையிலான) திசையில் எடுத்துச்சென்று விடையடையச் செய்கின்றது.

இதுதான் கணினி நிரலாளரின் குருகிய முகம் சுளிக்கும் பாவத்தில் உள்ள மன நிலை. அவர்/அவளு-க்கு ஒரு ஊக்குவிக்கும் சொல் கொடுங்கள் – இல்லை இல்லை சும்மா கூட விட்டுவிடுங்கள் – ஆனால் “ஐ.டியில் என்ன கிழிக்குர…” என்ற ஏழனப்பேச்சு வேண்டாம்.